அனார்கலியின் காதலர்கள்
நூல்கள் அறிவோம்
நூல் பெயர் : அனார்கலியின் காதலர்கள்
ஆசிரியர் : எஸ். செந்தில்குமார்
பதிப்பகம் : உயிர்மை பதிப்பகம்
நூல் பிரிவு : GS-2724
நூல் அறிமுகம்
நம் அன்றாட வாழ்வில் சந்திக்க நேரிடும் மனிதர்களின் அறியப்படாத பக்கங்களை இக்கதைகள் பேசுகின்றன.
இந்த மனிதர்கள் சந்திக்கும் புறக்கணிப்புகளும் அவமானங்களும் எந்தச் சுவடும் இல்லாமல் கடக்கப்பட்டுவிடுகின்றன. அவை மறதியின் புதை சேற்றுக்குள் தொடர்ந்து செலுத்தப்படுகின்றன. இந்த மறதிக்கு எதிரான சலனங்களை இக்கதைகள் ஏற்படுத்துகின்றன. மனிதர்கள் தங்களுக்கு நேரும் அவலமான தருணங்களுக்கு நடுவே தங்களது மகத்தான கணங்களை கண்டுகொள்வதையும் இக்கதைகள் பேசுகின்றன.
எஸ்.செந்தில்குமார் உருவாக்கும் சித்திரங்கள் நுட்பமும் கவித்துவமும் கூடியவை என்பதற்கு இந்தக்கதைகளும் உதாரணம்,
இந்நூலைப் படித்துப் பயன்பெற அன்புடன் அழைக்கிறது.
அய்யம்பேட்டை.
அஞ்சுமன் அறிவகம்.
Comments
Comments are closed.