மன இறுக்கம் போயே போச்சு
நூல்கள் அறிவோம்
நூல் பெயர்: மன இறுக்கம் போயே போச்சு.
ஆசிரியர்: கார்த்தீபன்
பதிப்பகம் : வானவில் புத்தகாலயம்
பிரிவு : GMA- 1453
நுால்கள் அறிவாேம்
வெறும் பணத்தால் மட்டும் எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு கண்டுவிடலாம் என்று எண்ணுபவர்கள் இன்றும் இந்த உலகத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள். இதைவிட அறியாமை இருக்கவே முடியாது. ‘ஆண்டிக்கு அவன் கவலை, அரசனுக்கு ஆயிரம் கவலை’ என்பது பழமொழி. பணமும் பதவியும் கூடக் கூட ஒருவனுக்கு ஏற்படக்கூடிய சுமைகளும் அதிகமாகிக் கொண்டேதான் வரும். மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ள முடியாத பிரச்சினைகள் ஏராளமாக ஒவ்வொரு மனிதனிடத்திலும் உண்டு. வாழ்வில் குறுக்கிடும் வாய்விட்டு, மனம்விட்டுச் சொல்ல முடியாத கவுரவப் பிரச்சினைகள் பலவற்றை நாள்தோறும் அவன் சந்திக்க வேண்டிவரும். அதன் விளைவு? டென்ஷன். மனிதனைப் பயமுறுத்தும் இந்த மன இறுக்கம் அல்லது மன உளைச்சல் எப்படி ஏற்படுகிறது? இதற்கான காரணங்கள் என்று உளவியல் மருத்துவர்கள் கருதுவது எவற்றை? என்று ஆயிரமாயிரம் கேள்விகள் உங்கள் மனதில் கிளைவிடக்கூடும். உங்களது சந்தேகங்களையெல்லாம் தீர்த்துவைத்து உங்களைக் கவலைகளற்ற மனிதாக்கப் போகிறது இந்தப் புத்தகம்.மன உளைச்சல் என்ற சொல்லைத் தெரியாதவர்கள் வேண்டுமானால் உலகில் இருக்கலாம். ஆனால் ‘டென்ஷன்’ என்ற சொல்லை அறியாத, அனுபவிக்காத ஒருவர் இந்த உலகில் இருக்கவே முடியாது. ஒரு நாளில் ஒரே ஒரு முறையாவது இந்த டென்ஷனானது மனிதனை வாட்டி வதைத்து விடுகிறது. அதனால் உடல் ரீதியாக, மன ரீதியாக மனிதனுக்குத்தான் எத்தனை எத்தனைப் பாதிப்புகள்!
*அஞ்சுமன் அறிவகம்*
அய்யம்பேட்டை, தஞ்சாவூர்.
Comments
Comments are closed.