பதேர் பாஞ்சாலி
நூல்கள் அறிவோம்
நூல் பெயர்: பதேர் பாஞ்சாலி
ஆசிரியர் : எஸ்.ராமகிருஷ்ணன்
பதிப்பகம் : உயிர்மை பதிப்பகம்
பிரிவு : GME – 2568
நுால்கள் அறிவாேம்
எஸ்.ராமகிருஷ்ணன் சத்யஜித் ரேயின் “பதேர் பாஞ்சாலி” திரைப்படத்தை மய்யமாகவைத்து “பதேர் பாஞ்சாலி — நிதர்சனத்தின் பதிவுகள்” என்றொரு புத்தகம் எழுதியிருக்கிறார். இதைப் படித்ததும் எனக்கும் சத்யஜித் ரேவிற்குமான உறவை நினைத்து flashback மோடிற்கு போய்விட்டேன்.
நான் முதல் முறை பதேர் பாஞ்சாலி பார்த்தது, NUS நூலகத்தில். வீடியோ டேப்பில் வைத்திருந்தார்கள். அதை வெளியே எடுத்துச் செல்லமுடியாது. நூலகத்தில் இருக்கும் TV-ல் மட்டும் தான் பார்க்கமுடியும். மிக சுமாரான பிரிண்ட். சிறு வயதில் வீட்டிலிருந்த கருப்பு வெள்ளை தொலைக்காட்சி பெட்டியைத் தட்டிக்கொடுத்தால், அவ்வப்போது போனால் போகிறது என்று காட்சிகளை காட்டும். அப்படி இருந்தது. நூலகத்தில் பலமான AC. படம் பார்க்க ஆரம்பித்து 20 நிமிடங்களிலேயே தூங்கிவிட்டேன். முழிப்பு வந்ததும், டேப்பை திரும்பக் கொடுத்துவிட்டு சாப்பிடக் கிளம்பிவிட்டேன்.
சில வருடங்களுக்குப் பிறகு, ரேயின் சிறுகதைகளைப் படித்து பிடித்துப்போய், மீண்டும் பதேர் பாஞ்சாலி பார்க்க அமர்ந்தேன். இம்முறை தூக்கம் வரவில்லை. பார்த்ததும் அப்போது தோன்றிய எண்ணங்களைக் குறித்துவைத்திருந்தேன்.
அஞ்சுமன் அறிவகம்
அய்யம்பேட்டை، தஞ்சாவூர்
Comments
Comments are closed.