இஸ்லாமியச் சட்டவியல்: ஒரு சர்வதேசப் பார்வை
நூல்கள் அறிவோம்
நூல் பெயர் : இஸ்லாமியச் சட்டவியல்: ஒரு சர்வதேசப்
பார்வை
ஆசிரியர் : சி.ஜி.வீரமன்த்ரி
பதிப்பகம் : மாற்றுப்பிரதிகள்
நூல் பிரிவு IF-01
நூல் அறிமுகம்
“இஸ்லாமியச் சட்டவியல் காலாவதியானது; காலத்துக்கு ஒவ்வாதது; அந்நியமானது போன்ற தவறான எண்ணங்களைத் தகர்க்கவே இந்நூல் வெளிவந்திருக்கிறது.”
— ஷெய்கு ஜாதுல் ஹக் அலி ஜாதுல் ஹக் (அல்-அஸ்ஹர் பல்கலைக் கழகம், கெய்ரோ)
“இந்நூலைப் படிக்கும் ஒவ்வொரு முஸ்லிம் ஆய்வாளரும், தான் அறிந்ததைவிட அதிகத் தகவலை இந்நூல் தன்னுள் கொண்டிருப்பதை அறியமுடியும்.”
— எம். எம். அப்துல் காதர் (முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி, இலங்கை)
இஸ்லாமியச் சட்ட ஞானம் கொஞ்சம்கூட இல்லாத ஒருவர், தனக்குச் சர்வதேச சட்டம் எல்லாம் தெரியும் என்று பெருமை அடித்துக்கொள்ள முடியாது என்று முழங்கும் இந்த நூல், சர்வதேச அமைதிக்குக் காரணமாக இருக்கும் பன்முகக் கலாச்சாரங்களைப் புரிந்துகொள்ளும் தன்மையின் அவசியத்தை வலியுறுத்துகிறது. காலங்காலமாக இஸ்லாமியச் சட்டவியலை வெறும் மதவாதமாகக் குறுக்கிப் பார்க்கும் தவறான பொதுப்புத்திக்கும், கீழைச்சிந்தனையான இஸ்லாமியச் சட்டவியலை எதிர்மறையாகக் கட்டமைத்து வைத்திருக்கும் மேற்கின் தவறான அணுகுமுறைக்கும் தக்க பதிலை இந்த நூல் தருகிறது.
சட்டத்தின்முன் அனைவரும் சமம் என்ற கருத்தை முதன்முதலில் இஸ்லாம்தான் அறிவித்தது. புகழ்பெற்ற குரோடியஸ் எழுதிய நூல் தோன்றுவதற்கு எட்டு நூற்றாண்டுகளுக்கு முன்பே இஸ்லாமியச் சட்டவியல் நூல்கள் இயற்றப்பட்டுவிட்டன. அன்று முதல் இஸ்லாமியச் சட்டம் பரிணாம வளர்ச்சியுடன் இயங்குகிறது என்பன போன்ற பல செய்திகளை விரித்துரைக்கும் இந்த நூல் குர்ஆனையும் இறைத்தூதரின் சுன்னாவையும் அடிப்படையாகக் கொண்டுள்ளது.
மனித உரிமைக் கோட்பாடுகளையும், சர்வதேச சட்டவியல் கோட்பாடுகளையும் உள்ளடக்கி இருக்கும் இந்த நூல் உலகெங்கிலும் இருக்கும் தத்துவவாதிகள், வரலாற்றாசிரியர்கள், சமூகவியலாளர்கள், அரசியல் விஞ்ஞானிகள் ஆகிய அனைவருக்கும் பயன்படக்கூடிய கையேடாக மிளிர்கிறது.
இந்நூலைப் படித்துப் பயன்பெற அன்புடன் அழைக்கிறது.
அய்யம்பேட்டை.
அஞ்சுமன் அறிவகம்.
Comments
Comments are closed.