நபிகளார் வரைந்த கோடுகளில் மனித வாழ்வு
நூல்கள் அறிவோம்
நூல் பெயர் : நபிகளார் வரைந்த கோடுகளில் மனித வாழ்வு
ஆசிரியர் : உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்
பதிப்பகம் : இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட்
நூல் பிரிவு : GIA – 2633
நூல் அறிமுகம்
நபிகளார் வரைந்த வாழ்வியல் கோடுகளை இவ்வளவு அழகாக நமக்கு வரைந்துகாட்டியுள்ள இந்த நூலின் ஆசிரியர் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்கள் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் தேசியத் தலைவர் ஆவார்.
சிறந்த மார்க்க அறிஞரும் எழுத்தாளரும் பேச்சாளருமான உஸ்தாத் அவர்கள், அரபிக் கல்லூரியின் முதல்வராக இருந்தபோது அவர் போதித்த அனைத்துப் பாடங்களும் குறிப்பாக, நபிமொழிப் பாட வேளைகள் சிந்தனை விருந்தாய் அமையும் என மாணவர்கள் மனம் திறந்து பாராட்டுகின்றனர். ஆம்.. உண்மைதான். நபிமொழி தரும் கருத்தை, அதன் மொழியாக்கத்தைக் கடந்து ஊடறுத்துத் தேடும் பாங்கும், அதற்கு ஆதாரங்களாக முன்வைக்கும் குர்ஆனிய, வரலாற்றுச் சான்றுகளும் நம்மைப் பிரமிக்க வைக்கின்றன.
இந்நூலைப் படித்துப் பயன்பெற அன்புடன் அழைக்கிறது.
அய்யம்பேட்டை.
அஞ்சுமன் அறிவகம்.
Comments
Comments are closed.