தேசம் மறந்த ஆளுமைகள்
நூல் பெயர் : தேசம் மறந்த ஆளுமைகள்
ஆசிரியர் : ராபியா குமாரன்
பதிப்பகம் : தூண்டில் பதிப்பகம்
நூல் பிரிவு : GHR-4.2
நூல் அறிமுகம்
இஸ்லாமிய இளைஞர்களுக்கு அரசியல் பற்றிய தெளிவான புரிதல் இல்லை, சரியான தலைமை இல்லை என்பது பல ஆண்டுகளாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு. தனது வாழ்நாளில் பல்வேறு சாதனை களைச் செய்து, வரலாற்றில் வாழும் மேன்மக்களின் வாழ்க்கை வரலாற்றுப் பக்கங்களை புரட்டினால் மட்டுமே அறிவார்ந்த, சமூக, அரசியல் தெளிவுடைய வருங்கால தலைமுறையை உருவாக்க முடியும்.
வாழ்ந்து மறைந்த அரசியல் முன்மாதிரிகளை ஒதுக்கிவிட்டு அரசியலில் முன்னேற்றம் காண்பதென்பது இயலாத காரியம். கற்றுக் கொள்ள இளைய தலைமுறையினர் எந்நேரமும் தயாராக இருக்கிறார்கள். அவர்களுக்கு கற்பிக்கவும், தேசத் தலைவர்களை அறிமுகம் செய்து வைப்பதற்கும்தான் ஆள் இல்லை. இக்குறையைப் போக்க உதவும் நூல்.
பஹதூர்ஷா ஜாபர், சர். சையது அஹமது கான், ஜாகீர் ஹீசைன், கான் அப்துல் கபார் கான், ரஃபி அஹமது கித்வாய், திப்பு சுல்தான், ஹைதர் அலி, மகாகவி இக்பால் ஆகிய ஆளுமைகளின் மறக்கப்பட்ட/மறைக்கப்பட்ட வரலாறு இந்நூலில் விரிவாக சொல்லப்பட்டுள்ளது. இந்நூலைப் படித்துப் பயன்பெற அன்புடன் அழைக்கிறது,
அஞ்சுமன் அறிவகம்
Comments
Comments are closed.