1-1-2018 அன்று காலை திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியின் நிர்வாகத்தினர் மற்றும் பேராசிரியப் பெருமக்களுக்கு வரவேற்பு மற்றும் கண்ணியப்படுத்தும் விழா நமது அஞ்சுமன் அறிவகத்தின் காண்ஃப்ரன்ஸ் ஹாலில் வைத்து நடைபெற்றது.
இவ்விழாவில் ஜமால் முஹம்மது கல்லூரியின் செயலாளர் மற்றும் தாளாளர் Dr.A.K.காஜா நஜ்முத்தீன் அவர்களும், கல்லூரியின் பொருளாளர் ஹாஜி M.J.ஜமால் முஹம்மது அவர்களும் கல்லூரியின் துணைச் செயலாளர் Dr.அப்துல் சமது அவர்களும். கல்லூரியின் பேராசிரியர்கள் Dr.செய்யது ஜாஹிர் ஹசன், Dr.மீரான் மைதீன், Dr.ஜஹாங்கீர், Dr.சிராஜுதீன், அமீருத்தீன், Dr.சையத் முஹம்மது, Dr.முஹம்மது இஸ்மாயில் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
ஜமால் முஹம்மது கல்லூரியின் மூத்த மாணவர் பாரத ஸ்டேட் வங்கியில் பணியாற்றிய ஜனாப் ஏ.ஆர்.எம்.தாஜுதீன் அவர்கள் தலைமை தாங்கி தலைமையுரை ஆற்றினார்கள்.
அஞ்சுமன் அறிவகத்தின் நிறுவனர் அல்ஹாஜ் டி.எம்.ஜபருல்லாஹ் ஹாஜியார் மற்றும் அறிவகத்தின் அன்பாளர்கள் முன்னிலையில் இவ்விழா இனிதே நடைபெற்றது.
இவ்விழாவினை தாஜ் மஸ்ஜிதின் மக்தப் பேராசிரியர் ராஜா முஹம்மது அவர்கள் கிராஅத் ஓதி துவக்கி வைத்தார்கள். ஜனாப் கம்பளி பஷீர் அவர்கள் இந்நிகழ்சியினை தொகுத்து வழங்கினார்கள். ஹாஜி S.P.J.முபாரக் அவர்கள் சிறப்பு விருந்தினர்களை வரவேற்று வரவேற்புறை நிகழ்தினார்கள்.
கல்லூரிக்கான நினைவுப் பேழையை ஜமால் முஹம்மது கல்லூரியின் செயளாளர் மற்றும் தாளாளர் Dr.காஜா நஜ்முத்தீன் அவர்களிடம் அல்ஹாஜ் மர்ஹபா பஷீர் அஹ்மது அவர்கள் வழங்கினார்கள். வருகை தந்திருந்த அனைத்து சிறப்பு விருந்தினரையும் நமது அஞ்சுமன் அறிவகத்தின் நிறுவனர் அல்ஹாஜ் டி.எம்.ஜபருல்லாஹ் ஹாஜியார் அவர்கள் சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தினார்கள்.
கல்லூரியின் செயளாளர் மற்றும் தாளாளர் Dr.காஜா நஜ்முத்தீன் அவர்கள் மற்றும் கல்லூரியின் பொருளாளர் Dr.ஐமால் முஹம்மது அவர்களும் ஏற்புரை வழங்கினார்கள். கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியர் Dr.முஹம்மது இஸ்மாயில் அவர்கள் அணிந்துரை வழங்கினார்கள். வழுத்தூர் அப்துர் ரவூஃப் அவர்கள் பாராட்டுரை வழங்கினார்கள். ஜம்ஜம் மில்லத் இஸ்மாயில் அவர்கள் நன்றியுரை வழங்கினார்கள். மவ்லானா மவ்லவி அல்ஹாஜ் பி.எம.ஜியாவுத்தீன் ஹழ்ரத் அவர்களின் துஆவுடன் இவ்விழா இனிதே நிறைவு பெற்றது. அல்ஹம்து லில்லாஹ்.