ஜாதியற்றவளின் குரல்

ஜாதியற்றவளின் குரல்

நூல்கள் அறிவோம்

நூல் பெயர்   : ஜாதியற்றவளின் குரல் 
ஆசிரியர்        : ஜெயராணி 
பதிப்பகம்      : கறுப்புப் பிரதிகள் 
நூல் பிரிவு   : GM – 02

நூல் அறிமுகம்

பத்திரிகையாளராக பணிபுரியும் ஜெயராணி, மீனா மயில் என்ற பெயரில், ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வு பற்றி எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. புதிரை வண்ணார்களாக்கப்பட்ட, பூர்வீக வண்ணக் கலைஞர்கள், இந்தியனே வெளியேறு, பொய்யர்கள் ஆளும் பூமி, விடுதலை என்பது, இருக்க விடலாமா ஜாதியை, தேவாலயத்தில் ஜாதி வெளி, கண்டதேவி சூழ்ச்சி, இன்னுமா இந்துவாக இருப்பது போன்ற கட்டுரைகள், வாசகனின் மனசாட்சியோடு உரையாடுகின்றன. ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை குறித்து எழுதுவோர், அவர்களின் உள் முரண்பாடுகளை விமர்சிப்பதில்லை என்ற கருத்து உண்டு. அந்த கருத்தை இந்த புத்தகம் உடைக்கிறது. தலித் இலக்கியம், அரசியல் போன்றவற்றை அறிய விரும்புவோரின் பட்டியலில், இந்த புத்தகம் கட்டாயம் இருக்கலாம்.

இந்நூலைப் படித்துப் பயன்பெற இனிதே அழைக்கிறது.

அஞ்சுமன் அறிவகம்

/ General Tamil

Share the Post

About the Author

Comments

Comments are closed.