திருப்பு முனைகள்
நூல்கள் அறிவோம்
நூல் பெயர் : திருப்பு முனைகள்
தொகுப்பு : என்.சொக்கன்
நூல் பிரிவு : GMA-2846
நூல் அறிமுகம்
உலகமே வியக்கும் சாதனையாளர்கள் 50 போரின் வாழ்க்கையில் நடந்த திருப்பு முனைச் சம்பவத்தை கோடிட்டுக் காட்டுகிறது இந்தப் புத்தகம்.
இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டள்ள 50 பேரில் ஒரு சிலரைத் தவிர மற்ற யாரும் ஏற்கனவே புகழ்பெற்ற குடும்பத்தில் பிறந்தவர்கள் அல்லர். அவர்களுடைய வாழ்க்கையில் அது குழந்தைப்பருவத்திலோ, இளம் பருவத்திலோ அல்லது முதுமைப் பருவத்திலோ ஏதோ ஒரு தருணத்தில் – ஒரு சிறு பொறி தட்டியது என்று சொல்வார்களே அது போல் – வாழ்க்கையையே மாற்றிய சம்பவத்தால், இன்று சாதனையாளர்களாக உயர்ந்து நிற்கின்றனர்.
உங்கள் வாழ்க்கையிலும் அதுபோன்ற ஒரு தருணம் நிச்சயம் உருவாகலாம். அந்தத் தருணம், எப்போது வரும்? எப்படி வரும்? யாரால் வரும்? என்று சொல்ல முடியாது. அதனால் நீங்கள் எப்போதும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டியது அவசியம். வாய்ப்பு எதிர்ப்படும் சமயத்தில் கப்பென்று பிடித்துக் கொண்டால் நீங்களும் ஒரு சாதனையாளர்கள் தான்.
சாதிக்கத் துடிக்கும் ஒவ்வொருவருக்கும் உந்து சக்தியாக இருக்கும் இந்நூலைப் படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.
அஞ்சுமன் அறிவகம்
Comments
Comments are closed.