முஸ்லிம் லீக் நூற்றாண்டு வரலாறு (பாகம்-1)
நூல்கள் அறிவோம்
நூல் பெயர் : முஸ்லிம் லீக் நூற்றாண்டு வரலாறு (பாகம்-1)
ஆசிரியர் : எழுத்தரசு ஏ.எம்.ஹனீப்
வெளியீடு :முஸ்லீம் லீக் பதிப்பக அறக்கட்டளை
நூல் பிரிவு : GP-2090
நூல் அறிமுகம்
இனிய இஸ்லாமிய ஒழுக்க நெறிமுறைகளைப் பேணி நேரிய நமக்கென அரசியல் ரீதியாக ஒரு தனிவழிமுறையை முன்னிருத்தி நம் சமுதாயத் தலைவர்களால் 1906-ல் உருவாக்கப்பட்ட அகில இந்திய முஸ்லீம் லீக் பற்றிய முழு வரலாற்றை அதன் தொடக்கத்திலிருந்து தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமானது.
பாக்கிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு இந்தியத் திருநாட்டில் முஸ்லிம்கள் எல்லாத் துறைகளிலும் எல்லா நிலைகளிலும் தங்கள் உரிமைகளையும் உணர்வுகளையும் முழுமையாகப் பாதுகாத்திட கண்ணியத் தென்றல் காயிதே மில்லத் (ரஹ்) அவர்களைத் தலைமையாகக் கொண்டு புதிய பரிணாமத் தோற்றத்தைப் பெற்ற இப்பேரியக்கம் நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்டது.
ஒரு வரலாற்றுப் பெட்டகமாகத் திகழும் ஏ.எம்.ஹனீப் அவர்கள் ஆரம்பத்திலிருந்து இன்று வரை இப்பேரியக்கத்தின் எல்லா தலைவர்களையும் நன்கு அறிந்திருந்தது மட்டுமல்லாமல், அவர்களில் பெரும்பாலானோருடன் நெருங்கிப் பழகிய நல்ல அனுபவம் உள்ளவர். மிகுந்த நினைவாற்றலை அருளப்பெற்றவர்கள். இதன் சரித்திர நிகழ்வுகளைத் தொடக்கத்திலிருந்து இன்று வரை எந்த கூடுதல் குறைவுக்கும் இடமின்றி நேரில் கண்ட காட்சிகளாக டித்துத்தந்திருக்கார் இந்நூல் ஆசிரியர்.
சுதந்திரத்திற்கு முன்பு – சுதந்திரத்திற்குப் பின்பு என முஸ்லிம் லீக் வரலாற்றினை இரண்டு பாகங்களாகப் பரித்து எழுதப்பட்டுள்ள இந்நூலின் முதலாம் பாகத்தைப் படித்துப் பயன்பெற இனிதே அழைக்கிறது.
அஞ்சுமன் அறிவகம்
Comments
Comments are closed.