முஸ்லிம்களின் அரசியல் பரிணாம வளர்ச்சி (1930-1947)
நூல்கள் அறிவோம்
நூல் பெயர் : முஸ்லிம்களின் அரசியல் பரிணாம வளர்ச்சி (1930-1947)
ஆசிரியர் : ஜே.பி.பி.மோரே
வெளியீடு :அடையாளம்
நூல் பிரிவு : GP-615
நூல் அறிமுகம்
“இந்நூல் எழுதும் சமயம் எனது நோக்கம் முழுவதும் வரலாற்று உண்மையை அது இருந்தது இருந்தவாறு, எப்பக்கமும் சாயாமல் அல்லது சாராமல் சித்தரிப்பது என்பதாகவே இருந்தது” – நூலாசரியர்
முனைவர் பட்டத்திற்காக இந்நூலாசிரியர் அவர்கள் “எகொல் த ஹாத் எதுத்ஆன் சயான்ஸ் சோசியால்ஸிடம் “சமர்ப்பித்த ஆய்வுக் கட்டுரையின் திருத்தப்பட்ட வடிவமே இந்நூல்.
1938ஆம் ஆண்டின் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது வெளியிடப்பட்ட திராவிட இயக்கம், சுதந்திரப் போராட்டக் காலத்தில் தமிழ் பேசும் முஸ்லிம்களை இந்திய அரசியலின் முன்னணிக்குக் கொண்டு வந்தது. ஒரு தனி முஸ்லிம் தாய்நாட்டுக்கான கோரிக்கையில் வெளிப்பட்ட அவர்களின் அரசியல் அபிலாஷைகளுக்கு மதமும் மொழியுமே பெருமளவு காரணம் என்ற உண்மையை இது எடுத்துக்காட்டியது.
உருது பேசும் மக்களின் தொடக்ககால ஆதிக்கம், தமிழ் முஸ்லிம் வியாபாரிகளுடனான அவர்களுடைய பூசல்கள், பிறகு தென்னிந்தியாவில் முஸ்லிம் லீக்கைத் தமிழ் முஸ்லிம்கள் கைப்பற்றியது ஆகியவற்றை இந்நூலின் ஆசிரியர் விரிவாக எடுத்துரைக்கிறார். ஒரு தனிநாட்டுக்கான கனவு தெற்கில் நிறைவேறாமல் போனாலும் இந்தப் பிராந்திய இயக்கம் பாகிஸ்தானின் உருவாக்கத்தில் முக்கியப் பங்கு ஆற்றியது.
வலுவான நடையில் கூறப்பட்டிருக்கும், தமிழ் முஸ்லிம்களின் அண்மைக்கால வரலாறு பற்றிய இந்த ஆய்வு, தமிழ் முஸ்லிம் இயக்கம் பற்றிய சமுகவியல், வரலாற்று ஆய்வுகளுக்கு ஒரு முக்கியமான பங்களிப்பாகும்.
தென்னக முஸ்லிம்களின் அரசியல் பரிணாம வரலாற்றை ஆய்வு ரீதியில் எடுத்துக் கூறும் இந்நூலைப் படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.
அஞ்சுமன் அறிவகம்
Comments
Comments are closed.