இந்திய அரசியல் வரலாறு

இந்திய அரசியல் வரலாறு

நூல்கள் அறிவோம்

நூல் பெயர் : இந்திய அரசியல் வரலாறு
ஆசிரியர் : கிருஷ்ணா ஆனந்த்
தமிழில் : ஜனனி ரமேஷ் 
வெளியீடு : கிழக்கு பதிப்பகம்
நூல் பிரிவு :GP- 581

நூல் அறிமுகம்

1947க்குப் பிறகான சூழலிலிருந்து தொடங்கி படிப்படியாக இந்திய அரசியல் உருப்பெற்ற கதையை விவரிக்கும் இந்தப் புத்தகம் நவீன இந்தியாவின் அரசியல் வரலாற்றை அழுத்தமாகப் பதிவு செய்கிறது. நேரு காலம், இந்திரா காலம், ராஜிவ் காலம், வி.பி.சிங் காலம், நரசிம்மராவ் காலம், வாஜ்பாய் காலம் என்று தனித்தனியே பாகம் பிரித்து தேசிய அளவிலும் மாநிலங்கள் அளவிலும் நிகழ்ந்த முக்கிய அரசியல் மாற்றங்களையும் போராட்டங்களையும் கட்சிதமாக பிடிக்கிறது.

இந்திய அரசியல் கட்சிகள் உருவான கதை இருக்கிறது. கூட்டணி அரசியல் தோன்றி வளர்ந்த கதை இருக்கிறது. இந்தியாவை பாதித்த முக்கிய சம்பவங்களும், அவற்றை அரசியல் ஆளுமைகள் எதிர்கொண்ட கதைகளும் இருக்கின்றன. ஆட்சிக் கவிழ்ப்புகள், அதிரடித் திருப்பங்கள், கொள்கை மாற்றங்கள் என்று இன்றைய அரசியல் களத்தில் இயல்பாகி விட்ட விஷயங்களின் தோற்றுவாய் இதில் இருக்கிறது.

கிட்டத்தட்ட 60 ஆண்டுகால இந்தியாவின் அரசியல் வரலாற்றை ஆழமான அதேசமயம் எளிமையான முறையில் விவரிக்கிறது இந்தப் புத்தகம். இந்திய அரசியல் பற்றி விரிவாக எடுத்துறைக்கும் இந்நூலைப் படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.

அஞ்சுமன் அறிவகம்

/ General Tamil

Share the Post

About the Author

Comments

Comments are closed.