இஸ்லாமிய உண்மை நம்பிக்கை அடிப்படைகளும் முரணானவையும் மற்றும் நன்மைகளைக் கட்டளையிட்டு தீமைகளைத் தடுப்பது கடமை

இஸ்லாமிய உண்மை நம்பிக்கை அடிப்படைகளும் முரணானவையும் மற்றும் நன்மைகளைக் கட்டளையிட்டு தீமைகளைத் தடுப்பது கடமை

 

நூல் பெயர் : இஸ்லாமிய உண்மை நம்பிக்கை அடிப்படைகளும் முரணானவையும் மற்றும் நன்மைகளைக் கட்டளையிட்டு தீமைகளைத் தடுப்பது கடமை

நூலாசிரியர் : இமாம் அப்துல் அஜீஸ் பின் அப்துல்லாஹ் பின் பாஸ் رحمه الله

தமிழில் : அபூநசீபா எம். எஃப்.அலீ

வெளியீடு : குகைவாசிகள்

நூல் பிரிவு : IA-2.2–5226

நூல் அறிமுகம்

இமாம் இப்னு பாஸ் رحمه الله அவர்களின் ஃபத்வாக்கள் பதினேழு பாகங்களாக அரபு மொழியில் வெளியாகியுள்ளன. அவற்றில் முதல் பாகத்தின் முதல் கட்டுரையாக இந்நூலின் முதல் நூல் தமிழில் அமைந்துள்ளது. சரியான இஸ்லாமிய அகீதாவை இரத்தினச் சுருக்கமாக விவரிக்கிறது இந்நூல்.

அடிப்படைகளை விவரிப்பதுடன் நிறுத்திக்கொள்ளாமல், பொய்யான கொள்கைகளுக்கு மறுப்பையும் சேர்த்துத் தருவது இதன் சிறப்பு. அடுத்த நூல் ஃபத்வா தொகுப்பின் ஐந்தாம் பாகத்தில் அழைப்புப்பணி குறித்த பகுதியில் இடம்பெறுகிறது.

அழைப்புப்பணி குறித்து மற்ற நூல்கள் பேசத் தவறிய முக்கியமான விஷயங்களை விவரிக்கிறார் இமாம் இப்னு பாஸ் رحمه الله. இரண்டுமே பல மொழிகளில் வெளியாகியுள்ளன. இவை சிறுவர் முதல் பெரியோர் வரை அனைவரும் படிக்க எளிமையானவை. இஸ்லாமியக் கல்விக் கூடங்களில் பாடமாக நடத்துவதற்கும் பொருத்தமானவை.

இத்தகைய நூல்களை படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.

அஞ்சுமன் அறிவகம்

Share the Post

About the Author

Comments

Comments are closed.