நீரிழிவு நோய்க் கட்டுப்பாடு
நூல் பெயர் : நீரிழிவு நோய்க் கட்டுப்பாடு
நூலாசிரியர் :லயன் S.சீனிவாசன்
வெளியீடு :கண்ணதாசன் பதிப்பகம்
நூல் பிரிவு :GMD–308
நூல் அறிமுகம் :
நீரிழிவு நோய் குணப்படுத்த முடியாத நோய் என்பது உங்களுக்கு தெரியும். ஆனால் இந்த மோசமான நோயுடன் கூட ஆரோக்கியமாக வாழ முடியும்.
அடிக்கடி சிறுநீர் போதல், அசாதாரண தாகம், பசி, சோர்வு இவை இந்த நோயை காட்டி கொடுத்துவிடும்.
மற்ற பல நோய்களை போல் அல்லாமல் நீரிழிவு நோயை நீங்கள் அலட்சியம் செய்தால், உங்கள் கண்கள், பாதங்கள், இருதயம், சருமம் இவையும் கூடிய சீக்கிரம் பாதிக்கப்படலாம்.
உரிய காலத்தில் சிகிச்சையை ஆரம்பித்து, திட்டமிடப்பட்ட உணவு முறைகளை அனுசரித்து, முறையான தேகப்பயிற்சி செய்து வந்தால், நோய் இருந்தும் நோய் இல்லாதவர்களை போல் ஆரோக்கியமாக வாழ்வதற்கு முழு வாய்ப்பும் இருக்கிறது.
நீரிழிவு நோயைப்பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியது அனைத்தையும் தெளிவுபடுத்த இப்போது ஒரு மிக விரிவான புத்தகம் இது ஒரு மிக அரிய அறிவு பொக்கிஷம்.
தமிழில் மிக எளிய நடையில் எழுதப்பட்டு மிக மிக உபயோகமான தகவல்களை தாங்கி வருகிறது. கட்டாயம் இந்தத் தகவல் களஞ்சியம் எல்லோருக்கும் பயன்பட வேண்டும் என்பது எங்கள் குறிக்கோள்.
நீங்கள் புதிதாக ஒன்றைக் கற்றுக் கொள்ளும்பொழுது நீங்கள் இன்னும் நீண்ட நாள் வாழ ஒரு புதிய சந்தர்ப்பத்தை தேடிக்கொண்டு விட்டீர்கள் என்று அர்த்தம்.
இத்தகைய நூல்களை படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.
அஞ்சுமன் அறிவகம்
Comments
Comments are closed.