நாட்டு வைத்தியம்
நூல் பெயர் :நாட்டு வைத்தியம்
தொகுப்பாசிரியர் :ப.நாகலிங்கம்
வெளியீடு :சங்கர் பதிப்பகம்
நூல் பிரிவு :GMD–306
நூல் அறிமுகம் :
ஆங்கில மருத்துவம் நோய்களுக்கு தற்காலிக குணத்தைத் தருகிறது. ஆனால் நாட்டு வைத்தியமோ, சிறிது கால தாமதம் ஆனாலும் நோய்களின் மூலகாரணத்தை கண்டறிந்து, அந்நோயை வேரோடு குணமாக்கும் சிறப்பு கொண்டது.
உச்சி முதல் பாதம் வரையில் உண்டாகும் நோய்களுக்கு என்னென்ன நாட்டு வைத்தியம் உண்டோ, அவற்றைத் தொகுத்து அளித்துள்ளோம். இப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து மூலிகைப் பொருட்களும் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் மருந்துகளே. மேலும் சில மருந்துகள் நம் சமையலுக்குப் பயன்படுத்தும் சமையலறைப் பொருட்களே.
சர்க்கரை நோய், ஆஸ்துமா போன்ற நீண்ட நாள் நோய்களுக்கும் இந்நூலில் குறிப்பிட்டுள்ளப்படி வைத்தியம் செய்து வந்தால், நோய் தீவிரத்தன்மை அடையாமல் தடுக்க முடியும் என்பதையும் குறிப்பிட்டுள்ளோம்.
சமீபகாலமாக மக்கள் நவீன உணவு முறைகளிலிருந்து மாறி, இயற்கை மருத்துவத்திற்கு மாறியிருப்பதும் அதனால் பக்கவிளைவுகள் ஏதுமின்றி நோய்கள் பூரணக் குணமாவதும் நாம் கண்கூடாகப் பார்க்கும் உண்மையாகும்.
அந்த வகையில் நிச்சயம் இந்நூல் வாசகர்களுக்கு பயன்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்நூலை அனைவரும் வாங்கி படித்து, பயன் பெறுமாறு பயன் பெறுமாறு கேட்டு கொள்கிறோம்.
இத்தகைய நூல்களை படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.
அஞ்சுமன் அறிவகம்
Comments
Comments are closed.