இந்துக்கள்: ஒரு மாற்று வரலாறு
இந்து மதத்தை பற்றிய உலகின் மிகச்சிறந்த அறிஞர்களில் ஒருவரின் முன்னோடியான படைப்பு. ஏற்கனவே அதன் அசாதாரணமான ஆழ்நோக்கு, பகுப்பாய்வு ஆகியவற்றிற்குப் புகழ்பெற்றது. இந்த புத்தகம் ஒரு செவ்வியல் நூலாகும் தகுதி படைத்தது. டோனிகருடைய நூல் தனது வீச்சில் மிக வியப்பூட்டுகின்ற ஒன்று. இதற்குமுன் எவரும் இத்தகைய நூல் ஒன்றை எழுத முடியும் என்று நினைத்தும் இருக்கமாட்டார்கள்… பரிவுணர்ச்சியோடும், ஒத்துணர்வோடும், நகைச்சுவையோடும், கூருணர்வோடும் எழுதுகிறார்… ஒரு சிறந்த புத்தகம்.
–விவேக் தேவ்ராய், தி இந்தியன் எக்ஸ்பிரஸ்
சமகால உலகில் இந்து மதத்தைப் பற்றிய தீவிர அக்கறை கொண்ட எவரும் இதைப் படித்து, மகிழ்ந்து, இதில் ஈடுபட்டு, இதனுடன் விவாதிக்கவும் வேண்டும் என்று அறிவுரைக்கலாம்.
–ஏ.ஆர்.வெங்கடாசலபதி, தி இந்து.
டோனிகரின் இந்நூல் கல்வெட்டுகள், காலவரலாறுகளினூடே ஒரு சாதாரணப் பயணம் அல்ல. மூவாயிரம் ஆண்டுகளாகப் பரந்துகிடக்கும் தலங்கள், சடங்குத் தருணங்கள், நேசத்திற்குரிய நூல்கள் ஆகியவற்றினூடாகச் செய்யும் ஒரு மாயப்பயணம் போலிருக்கிறது.
–டேவிட் ஷில்மன், தி நியூயார்க் ரிவ்யூ ஆஃப் புக்ஸ்
அஞ்சுமன் அறிவகம்
Comments
Comments are closed.