முதலில் படிக்கப்படும் நம்பிக்கையின் கடைசிப் பக்கம்
*அஞ்சுமன் அறிவகம்*
நூல்கள் அறிவோம்
நூல் பெயர் :முதலில் படிக்கப்படும் நம்பிக்கையின் கடைசிப் பக்கம்
ஆசிரியர் : டத்தோஸ்ரீ டாக்டர் ஹாஜி முஹம்மது இக்பால்
பதிப்பகம் : யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ்
நூல் பிரிவு : GMA – 123
நூல் அறிமுகம்
காலத்துக்கேற்ற நடப்பு விஷயங்களை நிர்வாகச் சிந்தனைகளாக டத்தோஸ்ரீ இக்பால் எழுதியுள்ளார். வணிகத்தில் உள்ளவர்களும், வணிகம் செய்ய எண்ணுபவர்களும், இதனைப் படிப்பது நல்லது. வழிகாட்டிக் குறிப்புகளைப் போல் இது அமைந்துள்ளது. வாழ்த்துகள். ஹாஜி எஸ்.எம். இத்ரீஸ் – தலைவர், பினாங்கு பயனீட்டாளர் சங்கம், பினாங்கு நம்பிக்கையின் எல்லாப் படைப்புகளும் சிறப்பானவை. என்றாலும் மாதந்தோறும் நான் விரும்பிப் படிக்கும் கடைசிப் பக்கக் கட்டுரைகள் ஒன்றையொன்று விஞ்சி) நிற்கின்றன. மொத்தத்தில் அவை அனுபவமானவை. அருமையானவை. போற்றப்பட்ட வேண்டியவை. பி.எஸ். மணியம் – தலைவர், மலேசிய திராவிடர் கழகம், கோலாலம்பூர் , எண்ணற்ற நிறுவனங்களில் பெயர் போட்டுக்கொள்வதைவிட ஒன்றில் பெயர் பதிப்பது, கெட்டிக்காரத்தனம் என்று டத்தோ ஹாஜி இக்பால் எழுதியுள்ள கருத்து எனக்காகவே கூறப்பட்ட கருத்தாகக் கருதுகிறேன். முழுமையாக அக்கருத்தை ஆமோதிக்கிறேன்.டத்தோ ஹாஜி மீரா மொஹைதீன் – ஆலோசகர், முஸ்லிம் லீக், மலாக்கா, டத்தோஸ்ரீ முஹம்மது இக்பால் அவர்களின் வணிக, நிர்வாகத் துறை சார்ந்த ஆழமான படிப்பறிவிற்கும் பட்டறிவிற்கும் தெளிவான சாட்சி அவர் நம்பிக்கையில் எழுதிவரும் கடைசிப் பக்கக் கட்டுரைகள். வியாபாரத்தை அறிவுபூர்வமாக மேற்கொள்வதற்குத் தேவையான காத்திரமான நடைமுறைச் சாத்தியமான முத்தான கருத்துகளை உள்ளடக்கிய சத்தான கருவூலம். தனக்கே உரிய பாணியில்டத்தோஸ்ரீஎழுதியுள்ளார்.மெளலானா ஏ.சி. ஷேக் அகார் முஹம்மது – துணைத் தலைவர், நளிமியா பல்கலைக்கழகம், பேருவளை, இலங்கை நம்பிக்கை வந்தவுடன் நான் அதனை முதல் பக்கத்தில் இருந்து தொடங்க மாட்டேன். கடைசிப் பக்கத்தைத்தான் முதலில் படிப்பேன். அதில் வர்த்தகம் குறித்து டத்தோஸ்ரீ இக்பால் அவர்களின் நிர்வாகச் சிந்தனைகள் ஆழமாகவும் அனுபவரீதியாகவும், கூறப்பட்டிருக்கும். டத்தோ ஹாஜி ஜமருல் கான் – தலைவர், செய்யது உணவகக் குழுமம், ஷா ஆலம். டத்தோஸ்ரீ இக்பால் அவர்களின் “இவர்களை நம்ப வேண்டாம்” என்ற ஆலோசனையை , முன்னரே பெற்றிருப்பேனேயானால், ஒரு இலட்சம் ரிங்கிட்டை இழந்திருக்க மாட்டேன். இந்த நடப்பு அறிவுரைகள், என்னைப் போன்ற பல பேர் தொடர்ந்து, இழந்து, விழித்துக் கொண்டு இருக்காமல் இருப்பதற்கு நல்ல பயனுள்ள வழிமுறைகள் அவை.
*அஞ்சுமன் அறிவகம்*
Comments
Comments are closed.