தற்கால இஸ்லாமிய சிந்தனை
நூல்கள் அறிவோம்
நூல் பெயர் ;தற்கால இஸ்லாமிய சிந்தனை
ஆசிரியர் : எம், எஸ், எம், அனஸ்
பதிப்பகம் ; அடையாளம்
நுால் ; IA 05
இஸ்லாமிய மறுகட்டமைப்பும் அரசியல் இஸ்லாமும் இந்த நூலின் முதன்மையான ஆய்வுப் பொருள்களாகும். அரசியல் இஸ்லாத்திற்கும் அடிப்படைவாதத்திற்கும் என்ன தொடர்பு, மேற்கத்திய நாகரிகத்திற்கும் இஸ்லாத்திற்கும் இடையிலான மோதல்கள் என்ன, அடிப்படைவாதத்தின் தோற்றமும் இஸ்லாத்தில் நவீனத்துவத்தின் செல்வாக்கும் தற்கால இஸ்லாத்தின் போக்கை எந்த அள்விற்குப் பாதித்துள்ளன என்பன குறித்து, அவற்றின் ஊற்றுக் கண்களோடு இந்த நூல் வாசகர்களுக்கு முன்வைக்கிறது.
இன்று அரசியல் இஸ்லாத்தின் செல்வாக்கு முஸ்லீம் உலகைப் பல்வேறு தாக்கங்களுக்கும் நெருக்கடிகளுக்கும் உள்ளாக்கி வரும் வேளையில், அவற்றை அறிந்துகொள்வது ஓர் இஸ்லாமியரின் பிரச்சினை மட்டுமல்ல, அறிவு வளர்ச்சி, சிந்தனை மாற்றம், அரசியல் போராட்டம், ஜனநாயகம் போன்றவற்றில் அக்கறையுள்ள அனைவருக்கும் பொதுவான என்பதை இந்நூல் வலியுறுத்துகிறது.
நவீனகால மேற்கத்திய சிந்தனைகளுக்கும் சமயவாதிகளின் எதிர்வாதங்களுக்கும் இடையே விரிவான உரையாடல் தேவையுள்ள இந்த நேரத்தில், அதற்கான ஒரு சிந்தனைக்கு காலத்தை இந்த நூல் வாசகர்களுக்கு உருவாக்கித் தருகிறது. தருகிறது.
இந்நூலைப் படித்து பயன்பெற அன்புடன் அழைக்கிறது அஞ்சுமன் அறிவகம்,
Comments
Comments are closed.