இஸ்லாமிய பார்வையில் நேர நிர்வாகம்
நூல்கள் அறிவோம்
நூல் பெயர் : இஸ்லாமிய பார்வையில் நேர
நிர்வாகம்
ஆசிரியர் : M.S.அப்துல் ஹமீது B.E
பதிப்பகம் :இலக்கிய சோலை
நூல் பிரிவு : IA -05
நூல் அறிமுகம் (முன்னுரையில் இருந்து)
அல்லாஹ்வும், அவனுடைய அருமைத் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களும் காலத்தைப் பற்றிச் சொன்னவைகள் அனைத்தையும் என்னால் முடிந்தவரை இந்த நூலில் குறிப்பிட்டுள்ளேன்.
நேரத்தைச் சரியாகப் பயன்படுத்தி இம்மையிலும், மறுமையிலும் வெற்றி பெறத் துடிப்பவர்களுக்கு இந்நூல் உறுதுணையாக இருக்கும் என்று நம்புகின்றேன்.
வெந்ததைத் தின்று விதி வந்தால் சாவோம் என்ற எண்ணம் உள்ளவர்கள் – வந்தோம் வாழ்ந்தோம் என்ற எண்ணம் உள்ளவர்கள் இந்த நூலைப் படித்து, தங்கள் வாழ்க்கைப் போக்கை சிறிதளவாவது மாற்றிக்கொண்டால் இந்நூல் ஓரளவு வெற்றி பெற்றுள்ளது என்று சொல்லலாம். அல்லாஹ் அதற்கு உதவி செய்வானாக!
இந்நூலில் போதுமான அளவு திருக்குர்ஆன் வசனங்களும், நபிமொழிகளும், நபிவழிகளும் இடம் பெற்றிருக்கின்றன.
அத்தோடு வாசகர்களுக்கு நூலின் நோக்கம் எளிதில் புரிய வேண்டும் என்பதற்காக நேரத்தைக் குறித்து சமகால நிகழ்வுகளையும், உதாரணங்களையும் இணைத்துள்ளேன். நேரத்தை நெறியோடு கடைப்பிடித்து சாதனைகள் புரிந்த சாதனையாளர்களின் நடைமுறைகளையும் ஆங்காங்கே தொட்டுக் காட்டியுள்ளேன். இது வாசிப்பு சலிப்பு தட்டாமல் இருக்கவேண்டும் என்பதற்காகவே.
ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நடைமுறையே இறுதியானவை, அவர்கள் காட்டித் தந்த வழிமுறைகளே அறுதியானவை. இதில் எந்தச் சந்தேகமும் இல்லை என்பதை வாசகர்கள் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். – M.S. அப்துல் ஹமீது
Comments
Comments are closed.