கண்ணியமிகு காயிதே மில்லத்
நூல்கள் அறிவோம்
நூல் பெயர் : கண்ணியமிகு காயிதே மில்லத்
ஆசிரியர் : ஜே.எம்.சாலி எம்.ஏ.,
வெளியீடு : யூனிவர்ஸல் பப்ளிஷர்ஸ்
நூல் பிரிவு : GHR-4.2
நூல் அறிமுகம்
“முதல் மனிதன் பேசிய மூத்த மொழி தமிழ் மொழியாகத்தான் இருக்க வேண்டும்; வேறு மொழியினைப் போல் இடம்பெயர்ந்து வராமல், இருந்த இடத்திலிருந்தே தோன்றியதுதான் நம் தமிழ் மொழி, பதினேழாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழின் பொற்காலம் தோன்றிவிட்டது” – செம்மொழியான நம் தமிழின் தொன்மைச் சிறப்பையும், வளத்தையும் எடுத்துக்கூறி, செந்தமிழே இந்தியாவின் ஆட்சிமொழியாக வேண்டும் என்று அரசியல் நிர்ணய சபையிலும், நாடாளுமன்றத்திலும் முழக்கமிட்டவர், கண்ணியமிகு காயிதே மில்லத் இஸ்மாயில் சாஹிப்.
“1947 இல் அரசியல் நிர்ணய சபையில் நான் தமிழுக்காகவும், தாய்மொழிக்காகவும் வாதாடினேன். தமிழுக்குரிய சிறப்புகள் வேறு மொழி எதற்கும் இல்லை என்பதால்தான் இந்தியாவின் ஆட்சி மொழியாகத் தமிழ் மொழி இருக்க வேண்டும் என அப்போது பேசினேன்” என்று உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் முழக்கமிட்டார்.
கண்ணியத்தின் திருவுருவம், கடமையின் சின்னம், செம்மொழிக் காவலர் என அனைவராலும் மதித்துப் போற்றப்படும் காயிதேமில்லத் அவர்களின் தனிச்சிறப்பையும், தமிழ் மொழியின் வளர்ச்சிக்காகவும், தமிழர், குறிப்பாக, சிறுபான்மையினர் நலதனுக்காவும் அவர் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பு குறித்தும் இந்நூல் விரிவாகப் பேசுகிறது.
இத்தகைய நூல்களை படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.
அஞ்சுமன் அறிவகம்
Comments
Comments are closed.