26/11 விசாரணை நீதித் துறையும் மயங்கியது ஏன்?
நூல் பெயர் : 26/11 விசாரணை நீதித் துறையும் மயங்கியது ஏன்?
ஆசிரியர் :எஸ்.எம். முஷ்ரிஃப்
வெளியீடு : வேர்கள் பதிப்பகம்
நூல் பிரிவு : GCR – 3979
நூல் அறிமுகம்
நாட்டில் கொந்தளிப்பு !
மக்களின் மனங்களில் குமுறல் !
நமது மத்திய உளவுத்துறையின் வட்டாரங்களில் வாட்டம் .
வலதுசாரி கும்பல்களின் கூடாரங்களில் குமுறல். காரணம் 26/11 (எ) மும்பைத் தாக்குதல் குறித்து இவர்கள் விட்ட பொய்களையும் புனைந்துரைகளையும், மராட்டிய காவல்துறை அதிகாரி ஐ.ஜி. அவர்களின் நூல் தவிடுபொடியாக்கிவிட்டது. அந்த நூல் :
“கர்கரேயைக் கொலை செய்தது யார் ? இந்தியத்
தீவிரவாதத்தின் உண்மை முகம்”
இந்த நூலில் அவர், மத்திய உளவுத்துறையின், மராட்டிய காவல்துறையின், கதையை உடைத்ததுடன் உண்மையையும் கண்டெடுத்துப் பிரகடனப்படுத்தினார்.
உங்கள் கைகளிலிருக்கும் இந்த நூலில், மத்திய உளவுத்துறைத் தங்கள் பொய்யை உண்மையென நிலைநாட்டிட, வழக்கின் போக்கு, விசாரணை இவற்றை திரித்தது – என்பதையும் தெளிவுபடுத்துகின்றார்.
அரசியல் நிர்ணயச் சட்டத்தால் ஆக்கப்படாத உளவுத்துறை நாட்டில் அனைத்தையும், அனைத்து நிர்வாக அமைப்புகளையும், கட்டுக்குள் வைத்து ஆட்டிப்படைக்கின்றது.
நூலாசிரியர் இந்த நிலை மாற்றப்பட நீதி நிலைக்க வேண்டும் என்கின்றார். இதற்கு நீதித்துறையே நம்புகின்றார். நாடுகின்றார்.
இத்தகைய நூல்களை படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.
அஞ்சுமன் அறிவகம்
Comments
Comments are closed.