பாரதப் பொருளாதாரம் அன்றும் இன்றும்
நூல் பெயர் : பாரதப் பொருளாதாரம் அன்றும் இன்றும்
மூலநூலாசிரியர் : பேராசிரியர் ப. கனகசபாபதி
வெளியீடு : கிழக்கு பதிப்பகம்
நூல் பிரிவு : GB-2215
நூல் அறிமுகம்
மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரக் கோட்பாடுகளும், வழிமுறைகளும் தோற்றுப் போய், உலக நாடுகளுக்கே இந்தியா முன் மாதிரியாக உள்ள காலம் இது.
உலகின் அண்மைக்கால பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர்கூட அதிகம் பாதிக்கப்படாத நாடுகளில் முக்கியமான நாடாக இந்தியா இருந்து வருகிறது. உலக அரங்கில் இந்தியாவின் தொடர்ந்த முன்னேற்றம் பல நாடுகளுக்கும் ஆச்சரியத்தையே உண்டாக்கியுள்ளது.
பாரத தேசமாக பொருளாதாரத்தின் உச்ச நிலையில் இருந்து, சுதந்தரம் பெற்ற போது வளர்ச்சியற்ற ஓர் ஏழை நாடாக நலிந்திருந்த இந்தியாவின் இன்றைய தொடர்ந்த முன்னேற்றம் எப்படி சாத்தியமானது?
இதற்கான அடிப்படைக் காரணம் என்ன? அன்று முதல் இன்றுவரை இந்தியப் பொருளாதாரத்தின் உண்மை நிலவரம் என்ன? அதன் அடிப்படைத் தன்மைகள் எவையெவை? இனி இந்தியாவின் எதிர்காலத்திட்டம் எப்படி அமைய வேண்டும்?
தொன்மையான பாரதத்தின் பண்டைய பொருளாதார நிலை தொடங்கி, பிரிட்டிஷ் பிடியில் சிக்கி சீரழிந்ததும், சுதந்தரத்துக்குப் பிறகான இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சியும், மீண்டெழும் இந்தியாவின் பொருளாதார அடிப்படை அம்சங்கள் அத்தனையும் வியப்பூட்டும் வகையில் விளக்குகிறது இந்நூல்.
இத்தகைய நூல்களை படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.
அஞ்சுமன் அறிவகம்
Comments
Comments are closed.