+2வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்?

+2வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்?

Image may contain: 3 people

நூல்கள் அறிவோம்

நூல் பெயர்: +2வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்?
ஆசிரியர்: சத்யநாராயண்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம்
பிரிவு: GE-545

நுால்கள் அறிவாேம்
பிளஸ் டூவுக்குப் பிறகு என்ன படிக்கலாம்?

இந்தக் கேள்வியைத் தனக்குத் தானே கேட்டுக்கொள்ளாத மாணவர்கள் இருக்கமுடியாது.

தம் பிள்ளைகளை எந்தக் கல்லூரியில், எந்தத் துறையில் சேர்ப்பது என்பது பற்றிப் பதற்றம் அடையாத பெற்றோர்களும் கிடையாது.

மருத்துவம், பொறியியல், அறிவியல், சட்டம் போன்ற எண்ணற்ற துறைகளிலிருந்து நமக்குப் பொருத்தமானதை எப்படித் தேர்ந்தெடுத்துக்கொள்வது?

எந்த அடிப்படையில் இதனை நாம் செய்யவேண்டும்? வேலை வாய்ப்பை வைத்தா அல்லது நம் திறமைகளின் அடிப்படையிலா அல்லது விருப்பத்தின் அடிப்படையிலா?

அதற்கு இந்தப் புத்தகம் ஒரு சிறந்த வழிகாட்டியாக இருக்கும்.

என்னென்ன துறைகள் உள்ளன?

ஒரு துறையைத் தேர்ந்தெடுப்பதன்மூலம் என்னவெல்லாம் கற்றுக்கொள்ளலாம்?

எப்படிப்பட்ட கல்வி நிறுவனங்களில் சேரலாம்?

ஐ.ஐ.டி, என்.ஐ.டி போன்ற கல்வி நிறுவனங்களில் இணைவதற்கான வழிவகைகள் என்னென்ன?

அயல் நாடுகளுக்குச் சென்று படிப்பது எப்படி? உள்ளிட்ட பல கேள்விகளுக்கு இந்தப் புத்தகத்தில் விரிவான பதில்கள் உள்ளன.

10, 11, 12ம் வகுப்பு மாணவர்கள் ஒவ்வொருவர் கைகளிலும் தவழ வேண்டிய ஓர் அத்தியாவசியமான கையேடு இந்நூல்.

பெற்றோர்களுக்குப் பயன் அளிக்கக்கூடிய நல்ல வழிகாட்டியும்கூட.

அஞ்சுமன் அறிவகம்
அய்யம்பேட்டை، தஞ்சாவூர்.

/ General Tamil

Share the Post

About the Author

Comments

Comments are closed.