ஹார்ட் அட்டாக்
நூல் பெயர் : ஹார்ட் அட்டாக்
எழுத்து வடிவம் :அய்.ஜெயச்சந்திரன்
நூலாசிரியர் :டாக்டர் இ.பக்தவத்சலம்
வெளியீடு :நலம் பப்ளிகேஷன்ஸ்
நூல் பிரிவு :GMD–2193
நூல் அறிமுகம் :
நமக்கு ஹார்ட் அட்டாக் வந்துவிடுமோ என்கிற கவலை எல்லா நாற்பது வயதுக்காரர்களுக்கும் உண்டு. வராதிருக்க என்ன செய்ய வேண்டும்? வந்தால் என்ன ஆகும்? சிகிச்சை எப்படி? செலவு என்ன ஆகும்? சிகிச்சைக்குப் பிறகு செய்ய வேண்டியவை என்னென்ன? அடுத்த அட்டாக்கை தவிர்க்க முடியுமா?…
ஹார்ட்அட்டாக் குறித்து உங்களுக்கு இருக்கக்கூடிய அத்தனை சந்தேகங்களுக்கு ஆதாரப்பூர்வமாக விடையளிக்கிற நூல் இது.
*மாரடைப்பு வருவதை முன்கூட்டியே தெரிந்து கொள்ள முடியுமா?
*ஆஞ்சியோகிராம், ஆஞ்சியோபிளாஸ்டி, ஸ்டென்ட், பைபாஸ் அறுவைச் சிகிச்சையால் உயிருக்கு ஆபத்து வருமா?
*அறுவைச் சிகிச்சையை யாருக்கு செய்யலாம்? யாருக்கெல்லாம் செய்யக்கூடாது?
*ஆஞ்சியோபிளாஸ்டி, பைபாஸ் சர்ஜரிக்குப் பிறகு மீண்டும் மாரடைப்பு வருமா?
*ஏழை மக்கள் இலவசமாக பைபாஸ் உள்ளிட்ட பிற இதய நோய் சிகிச்சைகளைப் பெற என்ன வழி?
*இரண்டாவது மாரடைப்பு எப்போது வரும்? அதைத் தடுப்பது எப்படி?
என்பது உள்ளிட்ட மாரடைப்பு, இதய நோய்களுக்கான நவீன சிகிச்சை முறைகள், வாழ்க்கை முறை மாற்றங்கள் போன்றவற்றைப் பற்றி விரிவாக எடுத்துச் சொல்கிறது இந்தப் புத்தகம்.
இத்தகைய நூல்களை படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.
அஞ்சுமன் அறிவகம்
Comments
Comments are closed.