ஸஹீஹ் முஸ்லிம் (பாகம் 4)
நூல் பெயர் : ஸஹீஹ் முஸ்லிம் (பாகம் 4)
மூலநூலாசிரியர் : இமாம் அபுல்ஹுசைன் முஸ்லிம் பின் அல்ஹஜ்ஜாஜ் ரஹிமஹுல்லாஹ்
தமிழாக்கம் : ரஹ்மத் பதிப்பகம், சென்னை
வெளியீடு : ரஹ்மத் அறக்கட்டளை, சென்னை
நூல் பிரிவு : IH-01–966
நூல் அறிமுகம்
இந்த நான்காம் பாகத்தில், முகமன்(சலாம்), சொல்லொழுக்கம்(அல் அல்ஃபாழு மினல் அதப்), கவிதை(அஷ் ஷிஅர்), கனவு(அர்ருஃயா), நபிமார்களின் சிறப்புகள்(அல் ஃபாளாயில்), நபித் தோழர்களின் சிறப்புகள்(ஃபளாயிலுஸ் ஸஹாபா), நற்பண்புகள்(அல் ஆதாப்), கல்வி(அல் இல்ம்), பிரார்த்தனைகள்(அத்தஅவாத்), பாவமீட்சி(அத்தவ்பா),
நயவஞ்சகர்களின் தன்மைகள்(ஸிஃபாத்துல் முனாஃபிக்கீன்), மறுமையும் சொர்க்கமும்(அல்கியாமத்து வல் ஜன்னத்து), குழப்பங்கள்(அல் ஃபித்தன்), உலகப் பற்றின்மை(அஸ் ஸுஹ்த்), திருக்குர்ஆன் விளக்கவுரை(அத் தஃப்சீர்), ஆகிய 16 அத்தியாயங்களும்(39-54) 1408 நபிமொழிகளும்(4364-5771) 996 பக்கங்களில் இடம்பெறுகின்றன.
இந்த நூலில் இடம்பெற்றுள்ள அரபி மூலமாகட்டும் தமிழாக்கமாகட்டும் முழுமையானவை; சுருக்கம் அல்ல. சுருக்கப் பிரதிகளில் இல்லாத நிறைவும் தெளிவும் இதில் உண்டு. பல மார்க்க அறிஞர்களும் தமிழ் அறிஞர்களும் பார்வையிட்டு, அவர்கள் அளித்த திருத்தங்கள் ஏற்கப்பட்டு, மொழிபெயர்ப்புக் குழுவால் முறையாக எழுதி வெளியிடப்பெற்ற சிறப்பு இதற்கு உண்டு.
இத்தகைய நூல்களை படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.
அஞ்சுமன் அறிவகம்
Comments
Comments are closed.