ஸஹீஹ் முஸ்லிம் (பாகம் 2)
நூல் பெயர் : ஸஹீஹ் முஸ்லிம் (பாகம் 2)
மூலநூலாசிரியர் : இமாம் அபுல்ஹுசைன் முஸ்லிம் பின் அல்ஹஜ்ஜாஜ் ரஹிமஹுல்லாஹ்
தமிழாக்கம் : ரஹ்மத் பதிப்பகம், சென்னை
வெளியீடு : ரஹ்மத் அறக்கட்டளை, சென்னை
நூல் பிரிவு : IH-01–968
நூல் அறிமுகம்
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேரருளால் பிரபல நபிமொழித் தொகுப்பான ஸஹீஹ் முஸ்லிம் தமிழாக்கத்தின் இரண்டாவது பாகம் உங்கள் கரங்களில் எட்டியுள்ளது. இந்த அரிய தொண்டினைப் புரிய அருள் புரிந்த வல்ல அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். அல்ஹம்துலில்லாஹ்.
இந்த இரண்டாவது பாகத்தில் ஜூமுஆ(அல் ஜூமுஆ), இரு பெருநாள் தொழுகை(ஸலாத்துல் ஈதைன்), மழைத் தொழுகை(ஸலாத்துல் இஸ்திஸ்கா), கிரகனத் தொழுகை(அல் குசூஃப்), இறுதிக் கடன்கள்(அல்ஜனாயில்), கட்டாயக் கொடை(அஸ் ஸகாத்), நோன்பு(அஸ்ஸியாம்), பள்ளிவாசலில் தங்குதல்(அல் இஃதிகாஃப்), ஹஜ்(அல் ஹஜ்), திருமணம்(அன் நிக்காஹ்), பால்குடிச் சட்டம்(அர் ரளாஉ), மணவிலக்கு(அத்தலாக்), மற்றும் சாப அழைப்புப் பிரமாணம்(அல் லிஆன்) ஆகிய 13 அத்தியாயங்களும் 1474 ஹதீஸ்களும் இடம்பெற்றுள்ளன. நபீம்மொழிகள் மட்டும் 803 பக்கங்களில் இடம்பெற்றுள்ளன.
இந்த நூலில் இடம்பெற்றுள்ள அரபி மூலமாகட்டும் தமிழாக்கமாகட்டும் முழுமையானவை; சுருக்கம் அல்ல. சுருக்கப் பிரதிகளில் இல்லாத நிறைவும் தெளிவும் இதில் உண்டு. பல மார்க்க அறிஞர்களும் தமிழ் அறிஞர்களும் பார்வையிட்டு, அவர்கள் அளித்த திருத்தங்கள் ஏற்கப்பட்டு, மொழிபெயர்ப்புக் குழுவால் முறையாக எழுதி வெளியிடப்பெற்ற சிறப்பு இதற்கு உண்டு.
இத்தகைய நூல்களை படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.
அஞ்சுமன் அறிவகம்
Comments
Comments are closed.