ஸஹீஹூல் புகாரீ(பாகம்-5)
நூல் பெயர் :
ஸஹீஹூல் புகாரீ (பாகம்-5)
மூல நூல்ஆசிரியர் : முஹம்மத் இப்னு இஸ்மாயீல் அல்-புகாரி رحمه الله
தமிழாக்கம்: ரஹ்மத் பதிப்பகம்
வெளியீடு : ரஹ்மத் பதிப்பகம்
நூல் பிரிவு : IH-02 —-3405
நூல் அறிமுகம் :
இஸ்லாமிய மூலாதார நூல்களில் திருக்குர்ஆனுக்கு அடுத்த இடத்தில் இருக்கும் உலகப் புகழ்பெற்ற நபிமொழித் தொகுப்பான ஸஹீஹூல் புகாரீ எனும் அரபு நூலின் தமிழாக்கம் ஐந்தாம் பாகம் உங்கள் கரங்களை எட்டியுள்ளது.
இந்த ஐந்தாம் பாகத்தில் 1348பக்கங்களில் 1594(5970-7563) நபிமொழிகள் இடம்பெற்றுள்ளன. இந்தப் பாகத்தில் இடம்பெற்றுள்ள அத்தியாயங்கள் 20(78-97).அவையாவன
1.நற்பண்புகள்(அல்அதப்).
2.(வீட்டுக்குள் நுழைய) அனுமதி கோருதல்(அல்இஸ்திஃதான்).
3.பிரார்த்தனைகள்(அத்தஅவாத்).
4.தத்துவங்கள்(அர்ரிகாக்).
5.(தலை)விதி(அல்கதர்).
6.சத்தியங்களும் நேர்த்திகடன்களும்(அல்அய்மானு)
7.சத்திய (முறிவுக்கான) பரிகாரங்கள்(கஃப்பாரா(த்)துல் அய்மான்).
8.பாகப்பரிவினைச் சட்டங்கள்(அல்ஃபராயிள்).
9.குற்றவியல் தண்டனைகள்(அல்ஹூதூத்).
10.இழப்பீடுகள்(அத்தியாத்).
11.இஸ்லாத்திலிருந்து வெளியேறியோர்(இஸ்திதாபத்துல் முர்தத்தீன்).
12.(குற்றங்கள் புரியுமாறு) நிர்ப்பந்திக்கப்படுதல்(அல்இக்ராஹ்).
13.தந்திரங்கள்(அல்ஹியல்).
14.கனவுக்கு விளக்கமளித்தல்(அத்தஅபீர்).
15.குழப்பங்கள்(சோதனைகள்).
16.நீதியும் நிர்வாகமும்(அல்அஹ்காம்).
17.எதிர்பார்ப்பு(அத்தமன்னீ).
18.தனிநபர் தரும் தகவல்கள்(அக்பாருல் ஆஹாத்).
19.இறைவேதத்தையும் நபிவழியையும் கடைப்பிடித்தல்(அல்இஅதிஸாம்).
20.ஓரிறைக் கோட்பாடு(அத்தவ்ஹீத்).
இத்தகைய பெறற்கரிய பொக்கிஷமாகத் திகழும் இந்நூலை படித்துப் பயன்பெற இனிதே அழைக்கிறது.
அஞ்சுமன் அறிவகம்
Comments
Comments are closed.