விலங்குகள் 1000 தகவல்
நூல்கள் அறிவோம்
நூல் பெயர் : விலங்குகள் 1000 தகவல்
ஆசிரியர் : சா.அனந்தகுமார்
வெளியீடு :அறிவுப் பதிப்பகம்
நூல் பிரிவு : GW
நூல் அறிமுகம்
விலங்குகள் – நமக்கு முன்னாலேயே இப்புவியில் தோன்றிவிட்ட உயிர்களாகும். இவைகள் இயற்கை வாழ்விலும், இயற்கைச் சமநிலையிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. விலங்குகளின் – வாழ்வும் வளமும் காக்கப்பட வேண்டுமென்ற விழிப்புணர்வு உலகம் முழுவதும் பெருகி உள்ளது. மிருகங்கள் பேரளவில் மனித குலத்திற்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ பயன்படுகின்றன. இவற்றில் பல விலங்குகள் இன்று பேரழிவில் உள்ளன.
நமது வாழ்க்கை முறை அவற்றைப் பாதிக்கும் வகையில் மாறிவிட்டது என்பதே உண்மை. இந்நூலில் விலங்குகளின் பல்வேறு பெயர், தன்மைகள், அமைப்பு, வசிப்பிடம் நன்மைகள், அறிவியல் பெயர்கள் மற்றும் பல தகவல்கள் 1000 கேள்வி, பதில்கள் வடிவில் தரப்பட்டுள்ளன. பொது அறிவு விரும்பிகளுக்கும், மாணாக்கர்க்கும், இந்நூல் பெரிதும் பயன்படும்.
இந்நூலைப் படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.
அஞ்சுமன் அறிவகம்
Comments
Comments are closed.