விருப்பத்தின் சக்தி

விருப்பத்தின் சக்தி

*விருப்பம் என்பது பொதுவாக ஒரு கடுமையான தீர்மானத்தைக் காட்டுகிறது. அந்தத் தீர்மானம் எந்த சோதனை மிக்க கட்டத்திலும் வெற்றியைக் கொண்டு வரும். எடுத்த காரியத்தில் நிச்சயம் இருந்தாலும் விருப்பம் என்ற தத்துவம் இந்தப் புத்தகத்தில் சற்றே வித்தியாசமாக எடுத்தாளப்பட்டிருக்கிறது. டாக்டர் வேயன் டையர் அந்தத் தத்துவத்தை ஆராய்ச்சி செய்து அது இந்த பிரபஞ்சத்தில் ஒரு பெரும் சக்தி என்று சொல்கிறார். அந்த சக்திதான் எல்லா படைப்புகளையும் கொண்டு வந்திருக்கிறது என்கிறார். விருப்பத்தை ஒரு சக்திப் புலமாகப் பார்ப்பது இதுவே முதல் தட‌வை. விருப்பத்தின் தத்துவங்களை முதல் பாகம் விளக்குகிறது. நிஜ வாழ்க்கையில் கிடைத்த உதாரணங்களை அது காட்டுகிறது. விருப்பத்துடன் எப்படி தொடர்பு கொள்வது என்று டாக்டர் டையர் விளக்குகிறார். எல்லாம் படைக்கப்பட்டு உருவான அந்த ஆதிமூலத்தின் குணங்களை கருணைமிக்க அன்புமிக்க சவுந்தர்யமிக்கது என்றும் பெருகிக் கொண்டிருப்பது, அபரிமிதமாகிறது என்றும் சொல்கிறார். அன்றாட வாழ்க்கையில் இந்த விருப்பத்தின் தத்துவத்தின் மூலமாக உயர்வது என்பதை விளக்குகிறார். பிரும்மத்தோடு ஒன்றிய மனம் எப்படியிருக்கும் என்பதையும் விளக்குகிறார்.

அஞ்சுமன் அறிவகம்

Share the Post

About the Author

Comments

Comments are closed.