வறுமை ஒழிப்பில் ஜகாத்தின் பங்கு

வறுமை ஒழிப்பில் ஜகாத்தின் பங்கு

நூல்கள் அறிவோம்

நூல் பெயர் : வறுமை ஒழிப்பில் ஜகாத்தின் பங்கு 
ஆசிரியர்     : பேராசிரியர் M.S. ஸைய்யிது முஹம்மது மதனி 
பதிப்பகம்    : இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் 
நூல் பிரிவு : IF – 01 – 1654

நூல் அறிமுகம்

ஜகாத், ஒரு வழிபாடு மட்டுமின்றி வறுமை ஒழிப்புத் திட்டமும், பொருளாதார சமூகப் பாதுகாப்புத் திட்டமும் ஆகும்; அது பொருள் வழி வணக்கம் மட்டுமின்றி சமூக வாழ்வின் இருள் நீக்கும் வழிமுறையுமாகும். அதன் அடிப்படையில் ஜகாத்தின் முழு விவரங்களையும் ஆராய்ந்து, மாறிவரும் பொருளாதாரச் சூழ்நிலைகளுக்கேற்ப ஜகாத்தை விளக்கிக் கூறும் ஒரு நூல் இல்லாதது ஒரு பெருங்குறையாக இருந்து வந்தது. அக்குறையை நீக்கும் வகையில் உங்கள் கைகளில் தவழும் இந்நூல் வெளிவந்திருக்கிறது. அல்ஹம்துலில்லாஹ்

மதங்களும் இஸங்களும் வறுமை ஒழிப்புக்குத் தந்த தீர்வுகள் யாவை; அத்தீர்வுகளால் ஏன் வறுமை ஒழியவில்லை; இஸ்லாம் எவ்வாறு அதை ஒழித்தது; ஜகாத் அதற்கு எப்படி வகை செய்கிறது என்பன பற்றித் தெரிந்துகொள்ள விழையும் ஒவ்வொருவருக்கும் இந்நூல் ஒரு வழிகாட்டியாய் அமையும். திருக்குர்ஆன் மற்றும் நபிவழியின் அடிப்படையில் ஜகாத் பற்றி விரிவாகத் தமிழில் ஆராயும் முதல் நூல் இதுதான்.

அஞ்சுமன் அறிவகம்

 

Share the Post

About the Author

Comments

Comments are closed.