லா இலாஹா இல்லல்லாஹ் கலிமாவின் பொருள் விளக்கம்
நூல் பெயர் : லா இலாஹா இல்லல்லாஹ் கலிமாவின் பொருள் விளக்கம்
நூலாசிரியர் : ஹசன் அலி உமரி
வெளியீடு : தாருஸ்ஸலாம் பதிப்பகம்
நூல் பிரிவு : IA-2.2–5242
நூல் அறிமுகம்
இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படை கொள்கையான லாஇலாஹா இல்லல்லாஹ் என்னும் கலிமாவை பற்றி அறிந்திருப்பது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கட்டாய கடமையாகும். ஆகவே தான் அல்லாஹ் கூறுகிறான் :
உண்மையான வணக்கத்திற்கு தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை என்பதை நன்றாக அறிந்துக் கொள்ளுங்கள்.
– அல் குர்ஆன் 47:19
லாஇலாஹா இல்லல்லாஹ் என்னும் கலிமாவைப் பற்றிய கல்வியறிவு இல்லாத காரணத்தினால் தான் மக்கள் அல்லாஹ்விற்கு இணை கற்பிக்கின்றனர். எனவே கலிமாவைப் பற்றிய கல்வியை அறிவது மிகவும் அவசியமாக இருக்கிறது. அத்தகைய கல்வியை மக்களுக்கு தெரியப்படுத்துவதற்கே இந்நூலை எழுதி இருக்கிறார்கள்.
இந்நூலில் லாஇலாஹா இல்லல்லாஹ்வின் அந்தஸ்து, சிறப்புகள், பொருள் விளக்கம், அடிப்படைகள், நிபந்தனைகள், அதன்மீது எவ்வாறு ஈமான் கொள்ள வேண்டும் மற்றும் அதனால் ஏற்ப்படும் நன்மைகள் யாவை என்பன போன்ற தலைப்புகளின் கீழ் தகவல்களை இடம் பெற செய்திருக்கிறார்கள்.
இத்தகைய நூல்களை படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.
அஞ்சுமன் அறிவகம்
Comments
Comments are closed.