ரசிகன்
*தமிழகத்தின் எண்பது, தொண்ணூறுகளின் தீவிர லட்சியவாத சிறுபத்திரிகை மரபைச் சேர்ந்த ஒருவன் இன்றுள்ள கேளிக்கைக் கலாச்சாரத்திற்கு வந்து சேர்கையில் என்னவாகிறான் என்பதே இந்நாவலின் மையம்.அத்தையவன் இன்றுள்ள மாற்றத்தை எதிர்க்கலாம் அல்லது அதைப் புறக்கணித்துத் தனது கனவுலகில் வாழலாம் எல்லது இதன் பகுதியாகி சந்தர்ப்பவாதி ஆகிவிடலாம். இந்தப் போராட்டம்தான் இந்த நாவலின் ஆதாரம். கேளிக்கைக் கலாச்சாரத்தின் வழியாகத் தன்னைத் தானே தண்டித்துக் கொள்பவனின் கதை இது.
இன்னொருபுறம் இந்நாவல் முழுமையான தன்னுணர்வு பெற்ற மனிதன் தன் வாழ்வின் நன்மை தீமைகளைத் தீர்மானிக்கும் நிலைமைக்கு வருகையில் எப்படியான பதற்றத்தை, நெருக்கடிகளைச் சந்திக்கிறான் என்பதையும் சித்தரிக்கிறது. கேளிக்கை என்பது வலி மிகுந்த வெறுமையான தப்பித்தல்தானா தனிமனிதனின் இருப்பு அவனுக்கு அப்பாலான ஒன்றா ஆகிய கேள்விகளைக் கேட்கிறது.
அஞ்சுமன் அறிவகம்
Comments
Comments are closed.