முஸ்னது அஹ்மத் ( பாகம்-1)
நூல் பெயர் : முஸ்னது அஹ்மத் ( பாகம்-1)
மூலநூலாசிரியர் : இமாம் அபு அப்தில்லாஹ் அஹ்மத் இப்னு ஹன்பல் رحمه الله
தமிழாக்கம் : ரஹ்மத் அறக்கட்டளை
வெளியீடு : ரஹ்மத் பதிப்பகம்
நூல் பிரிவு : IH-02–2301
நூல் அறிமுகம்
முஸ்னது அஹ்மத் போன்ற பிரம்மாண்டமான நபிமொழித் தொகுப்பு ஒன்றை தமிழில் கொண்டு வருவதை யாரும் எண்ணிக்கூடப் பார்க்கமாட்டார்கள்.
26363 ஹதீஸ்கள் கொண்ட மாபெரும் கிரந்தமாக அது இருப்பதே அதற்குக் காரணம். அத்தகைய ஒரு நூலின் ஒரு பகுதியை ரஹ்மத் அறக்கட்டளை சார்பாக மிகச் சிறப்புடன் செய்து முடிக்க எங்களுக்கு வாய்ப்பளித்த வல்ல அல்லாஹ்வை மெய்யன்புடன் வாழ்த்துகிறோம்.
இந்த முதல் பாகத்தில் மொத்தம் 1025 பக்கங்களில் 1608 நபிமொழிகள் இடம்பெற்றுள்ளன. தொடக்கத்தில் அணிந்துரைகள், ஹதீஸ்கலை வழக்குச் சொற்கள், மூல நூலாசிரியர் அவர்களின் வாழ்க்கை வரலாறு, நூல் அறிமுகம் ஆகியவை இடம்பெறுகின்றன.
இது இஸ்லாத்தில் மூலாதார நூல்களுள் ஒன்றாக இருப்பதால் வழக்கம் போல தமிழாக்கத்துக்கு நேராக வலப் பக்கத்தில் ஹதீஸ்களின் அரபி மூலத்தையும் தந்துள்ளோம்.
நபிமொழிகளை நபிகளாரிடமிருந்து நேரடியாகக் கற்றுக்கொண்டார்கள் நபித் தோழர்கள். அந்த நபித்தோழர்களின் அறிவிப்புகளிலிருந்தே நம்மால் நபிமொழிகளை அறிந்துகொள்ள முடிகிறது. குறிப்பிட்ட நபித்தோழர்கள் அல்லது அவர்கள் சார்ந்த நாடுகள் அல்லது குலங்கள் ஆகிய குடைகளின் கீழ் தொகுக்கப்பட்டதே முஸ்னது வகை நூல்கள்.
முஸ்னது வகைகளில் குறிப்பிட்ட தலைப்பில் நபிமொழிகளைத் தேடுவது சற்று சிரமமே. இந்தச் சிரமத்தை நீக்கும் வண்ணம் நூலின் துவக்கத்தில் (பக்கம்: A 71-124) அகவரிசைப் பொருள்கள் அட்டவணை ஒன்றை நாங்களே உருவாக்கித் தந்துள்ளோம்.
இத்தகைய நூல்களை படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.
அஞ்சுமன் அறிவகம்
Comments
Comments are closed.