மழைக்காடுகளின் மரணம்
நூல் பெயர் :மழைக்காடுகளின் மரணம்
மூல ஆசிரியர்:நக்கீரன்
வெளியீடு:பூவுலகின் நண்பர்கள்
நூல் பிரிவு:GAG–3883
நூல் அறிமுகம்:
மழைக்காடுகளை இன்றளவும் வாழ வைத்துக் கொண்டிருக்கும் ஆறுகளின் மடியிலும் கைவைக்க ஆரம்பித்துவிட்டார்களாம்.நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அங்குள்ள வற்றாத ஆறுகளில் இருந்து மணல் அள்ளும் கொள்ளைத் தொழிலும் தொடங்கிவிட்டதாம். என்ன சொல்ல?
இப்படியெல்லாம் சொன்னாலே போதும் ‘உங்கள் கூட்டத்துக்கே வேறு வேலையில்லை.எப்போது பார்த்தாலும் மரம்,காடு,விலங்கு,பறவை,சூழல் என்று ஆரம்பித்து விடுவீர்கள்.அவருக்கு நிறைய விளக்க வேண்டும். காற்றில் 21 விழுக்காடுதான் நாம் சுவாசிக்க தேவையான உயிர்வளி (ஆக்ஸிஜன்) இருக்கிறது.இந்த அளவும்கூட மரங்களும் இதர தாவரங்களும் நமக்கு கொடுக்கும் பிச்சையினால்தான் மழைக்காடுகளின் மரணம்.
கன்னிக் காடு என்றால் இன்னமும் வெளி மனிதர்களின் (பூர்வக் குடிகள் அல்ல) காலடிபடாத காடு என்று பொருள். மேலும் ஒரு காடு அழிவுறும்போது ஏற்படும் சூழலியல் பாதிப்பு என்ன? அக்காட்டில் வாழ்ந்துவரும் உயிரினங்கள்,பூர்வகுடிகளின் வாழ்வாதாரச் சிதைவு எவ்வகைப்பட்டது? மூன்றாம் உலக நாடுகளின் இயற்கை வளத்தை, மறைமுகமாகச் சுரண்டி,தன் ஊளைச் சதையை இன்னமும் பெருக்கிக் கொண்டிருக்கும் வளர்ந்த நாடுகளின் நுண்ணரசியல் எத்தகையது? இதையெல்லாம் பேசுகிறது, இந்த சிறு நூல்.
இந்நூல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் மேற்கொண்டு இந்நூலைப் படித்துப் பயன்பெற இனிதே அழைக்கிறது.
அஞ்சுமன் அறிவகம்
Comments
Comments are closed.