பாரதரத்னா டாக்டர் இராதாகிருஷ்ணன்
நூல்கள் அறிவோம்
நூல் பெயர்:பாரதரத்னா டாக்டர் இராதாகிருஷ்ணன்
ஆசிரியர் : மா.கமலவேலன்
பதிப்பகம் : அறிவுப் பதிப்பகம்
பிரிவு : GHR-4.2
நுால்கள் அறிவாேம்
குடியரசுத் தலைவராக இருந்த டாக்டர் இராதா கிருஷ்ணன் அவர்களைப் பற்றி தொகுக்கப்பட்ட நூல் இது. நூலாசரியர் கமலவேலன் டாக்டர். இராதா கிருஷ்ணனைப் பற்றிய செய்திகளை 20 தலைப்புகளின் கிழ் கொடுத்துள்ளார். பிறந்தது முதல் ஆசிரியர் பணியில் வாழ்க்கையை தொடங்கி படிப்படியாக பேராசிரியராக துணைவேந்தராக, வெளிநாட்டுத் தூதுவராக, இந்தியாவின் முதல் குடிமகனான குடியரசுத் தலைவரானார.
எளியக் குடும்பத்தில் பிறந்து எந்தவித பின் பலமும் இல்லாமல் தன்னம்பிக்கையினாலும், தன் முயற்சியினாலும் முன்னுக்கு வந்தவர். தத்துவத்துறையில் ரஸ்ஸலுக்கு அடுத்தப்படியாக உலகத்தாரால் ஏற்றுக்கொள்ளப்பட்டவர். அவர் சென்ற இடமெல்லாம் சிறப்பு. அவர் பேசிய பேச்சுக்கள் எல்லாம் வரலாற்றில் சிறப்பிடம் பெற்றன. பட்டங்களும் பதவிகளும் அவரைத் தேடி வந்தன. காந்தி, நேரு, அம்பேத்கர், சுபாஷ் சந்திரபோஸ், தாகூர் போன்ற இந்திய விடுதலைக்காக பாடுபட்ட மனிதர்களிடம் நேரடியாக தொடர்பு வைத்து இருந்தார். மாணவர்கள் தான் நாட்டின் எதிர்காலம் என்று கூறி மாணவர்கள்தான் வாழ்க்கையில் வெற்றிபெற பல முயற்சிகளை எடுத்துள்ளார். டாக்டர் இராதா கிருஷணன் அவர்களின் பிறந்தநாளான செப்டம்பர் 5- ஆம் நாள் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.
எளிய குடும்பத்தில் பிறந்து எப்படித் தன்னம்பிக்கையாலும் விடாமுயற்சியாலும் உயர் பதவிகளை அடைந்தார் என்பதை இந் நூலாசிரியர் அழகாக விளக்குகிறார். மாணவர்கள் ஒவ்வொருவரும் படித்துத் தெரிந்துகொள்ள வேண்டிய உன்னத மனிதரின் வரலாறு. மாணவர்களுக்கு பயன்படும் நல்ல நூல்.
அஞ்சுமன் அறிவகம்
அய்யம்பேட்டை, தஞ்சாவூர்
Comments
Comments are closed.