நேருவின் ஆட்சி பதியம் போட்ட 18 ஆண்டுகள்
நூல்கள் அறிவோம்
நூல் பெயர் : நேருவின் ஆட்சி பதியம் போட்ட 18 ஆண்டுகள்
ஆசிரியர் : ரமணன்
பதிப்பகம் : சிக்ஸ்த் சென்ஸ் பப்பிளிகேஷன்
நூல் பிரிவு : GHR – 02 – 509
நூல் அறிமுகம்
நேருவின் ஆட்சிக்காலம் பற்றி தமிழில் வெளியாகும் முதல் புத்தகம் இதுவே.சுதந்தர இந்தியாவின் நல்லதும் கெட்டதும் நேருவிடம் இருந்தே தொடங்குகின்றன.நேருவின் ஆட்சி பற்றி போற்றுவோரும் தூற்றுவோரும் ஒரே வாக்கியத்தைத்தான் சொல்கிறார்கள். “எல்லாவற்றுக்கும் நேருதான் காரணம்.” ஒரு தரப்பு பெருமிதத்துடன். இன்னொரு தரப்பு, பெருங்குறையுடன். அதற்குக் காரணம், நேருவின் ஆட்சிக்காலம் பற்றிய அழுத்தமான பதிவுகள் எதுவும் பிரத்யேகமாக எழுதப்படவில்லை என்பதுதான். தமிழில்தான் இல்லை என்றால், ஆங்கிலத்திலும்கூட சொற்ப பதிவுகளே வந்துள்ளன. ஆனால், அவற்றிலும் அனைத்து விஷயங்களும் பேசப்படவில்லை. காஷ்மீர், பாகிஸ்தான், சீனா என்ற மூன்று அம்சங்களை மட்டுமே அந்தப் பதிவுகள் அதிகம் பேசுகின்றன. ஆனால் அதைத்தாண்டியும் பேசுவதற்கும் புரிந்து கொள்வதற்கும் ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. இந்தியப் பிரிவினை, பாகிஸ்தானுடனான உறவும் முறிவும், காஷ்மீர் விவகாரம், இந்திய சீன உறவு, மொழிப்பிரச்னை, மதவாத அரசியல், இட ஒதுக்கீடு, இந்து – முஸ்லீம் உறவுகள் என்று சுதந்தர இந்தியாவின் ஆரம்பகால அசைவுகள் அனைத்துக்கும் நேருவின் ஆட்சியே பொறுப்பு. மேற்கண்ட விஷயங்களின் இன்றைய முன்னேறிய அல்லது பின்தங்கிய நிலைக்குப் பின்னணியில் இருப்பதும் நேரு எடுத்த முடிவுகளே. பதினெட்டு ஆண்டுகளையும் பதினெட்டு அத்தியாயங்களில் நுணுக்கமாகவும் அழுத்தமாகவும் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இந்தியாவின் சமகால அரசியலைப் புரிந்துகொள்ள விரும்பும் ஒவ்வொருவரும் இந்தப் புத்தகத்தை வாசிக்கவேண்டும். -பதிப்புரையிலிருந்து
இந்நூலைப் படித்துப் பயன்பெற அன்புடன் அழைக்கிறது.
அஞ்சுமன் அறிவகம்
Comments
Comments are closed.