நாங்கள் ஏன் இஸ்லாத்தை ஏற்றோம்… (இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்களின் வாக்குமூலம்)
நூல்கள் அறிவோம்
நூல் பெயர் : நாங்கள் ஏன் இஸ்லாத்தை ஏற்றோம்... (இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்களின் வாக்குமூலம்)
ஆசிரியர் : மவ்லவி அபுல்ஹஸன் ஃபாஸி M.A
வெளியீடு : சாஜிதா புக் சென்டர்
நூல் பிரிவு : IA-04
நூல் அறிமுகம்
இவ்வுலகில் தோன்றிய காலம் முதல் இன்று வரை சத்திய மார்க்கமான இஸ்லாம், மக்களால் மனமுவந்து ஏற்கப்படும் மார்க்கமாகத் தான் இருந்து வருகிறது. சமகால உலகிலும் மக்கள் அதிகமாக தழுவும் மார்க்கமாக இஸ்லாமே திகழ்கின்றது.
மறைந்த பெரியார்தாசன் டாக்டர் அப்துலலாஹ் 2012 ஆம் ஆண்டிலும், நடடிகை மோனிகா (ரஹீமா), இசைக் கலைஞர் யுவன் சங்கர் ராஜா போன்ற பிரபலங்கள் 2014 ஆம் ஆண்டிலும் இஸ்லாத்தைத் தழுவிய சமயத்தில் நமது தமிழகத்தில் இது வெளிச்சத்துக்கு வந்தது.
“பிரிட்டனில் ஒவ்வொரு வருடமும் 5000 பேர் இஸ்லாத்தை தழுவுகிறார்கள்” என்று பிரிட்டனின் மிகப் பிரபல ஆங்கில நாளிதழான கார்டியன் இதழ் கடந்த 2013ஆம் ஆண்டு அக்டோபர் 11 ஆம் தேதி குறிப்பிட்டது.
“தற்போது இங்கிலாந்து நாட்டில் சுமார் ஒரு இலட்சம் பேர் இஸ்லாத்தை தழுவியவர்களாக உள்ளனர். அவர்களில் நாற்பதாயிரம் பேர் கடந்த பத்தாண்டுகளில் இஸ்லாத்தைத் தழுவியவர்கள்” என்று டெய்லி மெய்ல் நாளிதழ் குறிப்பிடுகிறது.
இஸ்லாத்திற்கெதிரான எத்தனையோ அவதூறுகள் இருந்தாலும் இஸ்லாத்தின் உண்மை முகம் மக்களை தன்பக்கம் கவர்ந்திழுத்துவருகிறது. இவ்வாறு இஸ்லாத்தை ஏற்றதால் மக்களுக்கு மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய சுமார் பதினைந்து பேரையும், அவர்கள் ஏன் இஸ்லாத்தை ஏற்றார்கள் என்ற அவர்களது வாக்குமூலத்தையம் இந்நூலில் கூறியிருக்கிறார் இந்நூல் ஆசிரியர்.
அந்த பதினைந்து நபர்கள்,
1.நெதர்லாந்து அரசியல்வாதி அர்னாடு வேன்டூன்
2.பிரஞ்சுப் பாடகி டியாம்ஸ்
3. குவாண்டனாமா சிறைக்காவலர் டெர்ரி ஹால்ட் புரூக்ஸ்
4. கிறிஸ்தவ பாதிரியார் டாக்டர்.கேரி மில்லர்
5. சுவிட்சர்லாந்து அரசியல்வாதி டேனியல் ஸ்ட்ரெய்ச்
6. அமெரிக்க மருத்துவர் லாரன்ஸ் பிரெளன்
7. அமெரிக்க பெண்ணுரிமைப் போராளி ஷரீஃப் கார்லா
8. மெத்தோடிஸ்ட் கிறிஸ்தவர் ஜோசுவா எவன்ஸ்
9. ஆர்.எஸ்.எஸ்.தொண்டர் உமர் ராவ்
10. பிலிப்பைன்ஸ் பாதிரியார் ராபர்ட்டோ டெலோஸ்
11. பிரிட்டன் கம்யூனிசவாதி ஜான் வெப்செட்டர்
12. சர்ச் ஆஃப் கிறிஸ்ட் கிறிஸ்தவர் அஃப்ரஹ் ஷைபானி
13. அமெரிக்கப் பேராசிரியர் டொனால்டு ஃபில்ட்
14. அமெரிக்க இளைஞர் ஜெர்மெய்ன் போடி
15. எகோவின் சாட்சிகள் கிறிஸ்தவர் ரஃபாயில் நர்பாயிஸ்
இஸ்லாத்தைப் பற்றி தெளிவாக அறிந்து கொள்ள உ தவும் மிகவும் சுவாரசியமான இந்நூலைப் படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.
அஞ்சுமன் அறிவகம்
Comments
Comments are closed.