தோழர்கள் பாகம் 1
நூல்கள் அறிவோம்
நூல் பெயர் : தோழர்கள் பாகம் 1
ஆசிரியர்: நூருத்தீன்
பதிப்பகம் : நிலவொளி பதிப்பகம்
நூல் பிரிவு : IHR – 03
நூலைப் பற்றி-
நபிகளாரைச் சுற்றி இருந்த அத்தனைபேரும் சகோதரர்களாகவே மதிக்கப்பட்டார்கள். அவர்களைக் குறிக்க ஒரே ஒற்றைச் சொல் போதுமானதாக இருந்தது. அவர்கள் அனைவரும் ஸஹாபாக்கள் எனும் ‘தோழர்கள்’. இந்தத் தோழர்கள் வட்டத்தில் பெண்களும் இருந்தனர்.
காம்ரேட்’ தோழர்கள் எனும் வார்த்தை அர்த்தம் பெற்றது அப்போதுதான். அது கூட்டுச் சொல் அல்ல புரட்சியின் பெரும் முழக்கம், மனிதர்களை உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்று கோடு கிழித்துப் பிரித்து, அடிமை என்று சந்தையில் சலுகை விலைக்கு விற்ற காலத்தில்தான் அத்தனை அடுக்குகளையும் ‘தோழர்’எனும் ஒற்றை வார்த்தை உடைத்து நொறுக்கியது.
இந்த நூல் பெரும் சேகரம். ஒவ்வொரு தோழரைக் குறித்தும் மிகத் தெளிவான வரலாற்றுக் குறிப்புகளை மட்டும் வழங்காமல் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை நேர்த்தியாக எடுத்துரைக்கின்றது.
ஒவ்வொரு தோழரின் வாழ்வையும் நாம் படிக்கும்போது மனம் தவிக்கின்றது. பரபரக்கின்றது. அழுகை முட்டிக் கொண்டு வருகிற நம்மை நினைத்து வெட்கம் மேலிடுகிறது. இப்படியெல்லாம் நேர்மையாக, எளிமையாக, உண்மையாக, வீரமாக, பேரன்பு வாழ்தல் சாத்தியமா? என்று வியப்பு மேலிடுகிறது. ஆனால் அவர்கள் அப்படித்தான் வாழ்ந்திருக்கின்றார்கள். அண்ணல் – நாயகம்(ஸல்) அவர்களை வளர்த்தது எப்படி
இந்த நூலை நூலாசிரியர் நூருத்தீன் எழுதிய விதம் அற்புதம்.
ஒரு திரைமொழியை அவர் நூல் முழுவதும் கையாண்டிருக்கின்ற ஒவ்வோர் அத்தியாயத்தின் திறப்பும், முடிப்பும் செம்மையாக அமைந்திருக்கின்றன. காட்சிகள் மனத்திரையில் விரிகின்றன.
*அஞ்சுமன் அறிவகம்*
Comments
Comments are closed.