தியாகத்தின் நிறம் பச்சை
நூல்கள் அறிவோம்
நூல் பெயர் : தியாகத்தின் நிறம் பச்சை
ஆசிரியர் : பேராசிரியர் மு.அப்துல் சமது
வெளியீடு : நேஷனல் பப்ளிஷர்ஸ்
நூல் பிரிவு : GHR-4.1 3311
நூல் அறிமுகம்
(முன்னுரையிலிருந்து சில வரிகள்)
“இந்தியாவின் வரலாறு அதிலும் குறிப்பாக இந்திய இஸ்லாமியரின் வரலாறு திருத்தி எழுதப்பட வேண்டும் என்பது இன்றைய காலகட்டத்தின் கட்டாயத் தேவை.
முஸ்லிம்களைத் தேச விரோதிகள், தேசப்பற்று இல்லாதவர்கள், வன்முறையாளர்கள், இந்த மண்ணின் மரபுகளுடனும் இந்திய தேசத்தின் பண்பாட்டு பாரம் பரியங்களுடனும் ஒத்துப் போகாதவர்கள் என்றெல்லாம் கட்டுக்கதைகள் தீவிரமாகப் பரப்பப்பட்டு வருகின்றன. இந்தச் சூழலில் இந்திய தேசத்தின் விடுதலைப் போரில் பச்சை ரத்தமாய் பரிமாறப்பட்ட இஸ்லாமியர்களின் தியாகங்களும் வரலாறுகளும் மீண்டும் மீண்டும் பேசப்பட வேண்டும்.
இந்தத் தார்மீகப் பொறுப்புணர்வின் அடிப்படையில் தான் இந்நூலை நான் அறிந்த வரலாற்று ஆதாரங்களைக் கொண்டு படைத்துள்ளேன்.
இந்திய விடுதலைக்கு இஸ்லாமியர் ஆற்றிய தொண்டகளை முழுமையாகப் பேசுவதோ, பல்வேறு தளங்களில் நின்று தியாகம் புரிந்தோர் பெயர்களைப் பட்டியலிட்டுக் காட்டுவதோ என் நோக்கமல்ல. என் மனதைப் பாதித்த விசயங்களை மட்டும் உங்களோடு பகிர்ந்து கொள்ளும் ஆர்வத்தை மட்டும் இந்நூலின் பக்கங்களுக்குள் நான் பத்திரப்படுத்தியுள்ளேன்”.
இந்திய இஸ்லாமிய வரலாற்றை தெளிவாக ஒழிவுமறைவின்றி அறிந்து கொள்வதற்கு தகுதிவாய்ந்த இந்நூலைப் படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.
அஞ்சுமன் அறிவகம்
Comments
Comments are closed.