டேலி ERP 9
நூல் பெயர் : டேலி ERP 9
ஆசிரியர் :செ. சோமசுந்தரம்
வெளியீடு : கண்ணதாசன் பதிப்பகம்
நூல் பிரிவு : GC – 2098
நூல் அறிமுகம்
டேலி. ERP 9 என்பது மிக பிரபலமான ஒரு அக்கவுன்டிங் சாப்ட்வேர் ஆகும்.
பெங்களூரில் உள்ள டேலி சொலுஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் எனும்
நிறுவனம் இதை உருவாக்கி வெளியிட்டு உள்ளது. ஒரு வணிக நிறுவனத்தின் அனைத்து பணிகளையும் அதாவது கணுக்குகள், சரக்கிருப்பு, சம்பள பட்டியல், அரசாங்க வரிகள், இணைய பயன்பாடுகள்,
போன்றவற்றை மேலாண்மை செய்வதற்கு இந்த டேலி சாப்ட்வேர் பெரிதும் உதவுகிறது. ENTERPRISE RESOURCE PLANNING என்பதன் சுருக்கமே ERP ஆகும். ஏனென்றால் ஒரு மாநிலம் விட்டு ஒரு மாநிலத்திற்கு வர்த்தகம் நடைபெறும்பொழுது அதற்கான அறிக்கைககள் இந்தியாவின் பொது வர்த்தக மொழியான ஆங்கிலத்தில்
இருப்பது தான் வசதியாக இருக்கும்.
அக்கவுன்ட்ஸ் என்றால் என்ன ? வர்த்தக நிறுவனங்களில் இது எந்த அளவிற்கு முக்கிய பங்கு வகிக்கிறது என்பது பற்ற தெளிவாக விளக்கப்பட்டிருக்கிறது. வர்த்தக நிறுவனங்களின் அக்கவுண்ட்ஸ்
பணிகள் மட்டுமல்லாது கம்ப்யூட்டரில் டேலி ENTERPRISE RESOURCE PLANNING 9 மூலமாக எவ்வாறு மேலாண்மை செய்வது என விளக்கப்பட்டுள்ளது.
ஆங்கிலம் அறியாதவர்களுக்கு தமிழில் (அல்லது இந்திய மொழிகளில்)
எவ்வாறு டேலியின் திரைத் தோற்றத்தை மாற்றிக்கொள்வது உள்ளீடுகளை அளிப்பது என்பன விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
இன்வாய்ஸ், பில் , வவுச்சர்கள் மற்றும் நிதி அறிக்கைகளை டேலியில்
இருந்து கொண்டே எப்படி உருவாக்குவது, அச்செடுப்பது, இ – மெயிலில்
அனுப்புவது என்பது பற்றி விவரிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய நூல்களை படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.
அஞ்சுமன் அறிவகம்
Comments
Comments are closed.