டாலர் தேசம்
நூல்கள் அறிவோம்
நூல் பெயர் : டாலர் தேசம்
ஆசிரியர் : பா.ராகவன்
வெளியீடு : கிழக்குப் பதிப்பகம்
நூல் பிரிவு : GHR-01 683
நூல் அறிமுகம்
அமெரிக்கா என்றொரு தேசம் உருவான நாள் தொடங்கி இன்று வரை ஓயவில்லை அதன் யுத்தங்கள். ஒவ்வொரு போருக்கும் எத்தனை செலவு. எப்படி சமாளிக்கிறார்கள்? அந்த நாட்டில் மட்டும் காசு செடியில் முளைக்கிறதா?
அமெரிக்காவால் மட்டும் எப்படி நினைத்தநேரத்தில் போலீஸ்காரன் அவதாரம் எடுக்க முடிகிறது? உண்மையில் அமெரிக்கா போலீஸ்காரனா? போலீஸ்காரன் வேஷத்தில் இருக்கும் பக்காத்திருடனா? புஷ் போர் வெறியரா? தேவ தூதரா?
அமெரிக்கா விஷயத்தில் ஏன் ஐ.நா.வின் சொல் பெரும்பாலும் எடுபடுவதில்லை? அமெரிக்காவின் போர்களைக் கண்டிக்கும் இந்தியா போன்ற நாடுகள் கூட ஏன் இப்போது அமெிக்காவுக்கு வால் பிடிக்கிறது
எல்லாம, சரி, அமெரிக்கா எப்படி வல்லரசானது?
அத்தனை கேள்விகளுக்கும் விடை தருகிறது இந்நூல்.
குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் தொடராக வெளியாகி ஏராளமான வாசகர்களின் பாராட்டுக்களைப் பெற்ற இந்நூலைப் படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.
அஞ்சுமன் அறிவகம்
Comments
Comments are closed.