டாக்டர் இல்லாத இடத்தில்
நூல் பெயர் : டாக்டர் இல்லாத இடத்தில்
ஆசிரியர் : டேவிட் வெர்னர்
வெளியீடு : அடையாளம்
நூல் பிரிவு : GMD—303
நூல் அறிமுகம்
இது ஒரு முதலுதவி புத்தகதிற்கும் மேலானது. பரவலான மக்களின் ஆரோக்கியத்தைப் பாதிக்கின்ற வயிற்றுப் போக்கு முதல் காசநோய் வரை, பயனுள்ள மற்றும் தீங்கு விளைவிக்கின்ற. வீட்டு வைத்தியங்கள் முதல் நவீன கால மருந்துகளை எச்சரிக்கையாகப் பயன்படுத்துவது வரை பல விஷயங்களைப் பேசுகிறது. சுத்தம், ஆரோக்கியமான உணவுமுறை, தடுப்பூசிகள் குறித்து இதில் சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் பிரசவம், குடும்பநலத் திடம் பற்றியும் இந்தப் புத்தகம் விவாதிக்கிறது, தாங்கள் சுயமாக என்ன செய்துகொள்ள இயலும் என்பதை வாசகர்களுக்கு உணர்த்துவது மட்டுமின்றி, எந்தெந்தப் பிரச்சினைகளுக்கு ஒரு நலப்பணியாளரின் கவனிப்புத் தேவை என்பதை அறிவதற்கும் இது உதவுகிறது.
விரிவாக்கப்பட்ட இந்தப் புதிய பதிப்பில் சில கூடுதலான உடல்நலப் பிரச்சினைகள், எச்ஐவி/எய்ட்ஸ், டெங்குக் காய்ச்சல், கருச்சிதைவினால் ஏற்படும் சிக்கல்கள், மனநலப் பிரச்சினைகள், வாழ்க்கை முறை மாற்றத்தால் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் முதலான பல தலைப்புகளில் நிறைய தகவல்கள் இடம் பெற்றுள்ளதோடு, முந்தைய பதிப்புகளில் விவாதிக்கப்பட்ட தலைப்புகள் குறித்த புதிய தகவல் சார்ந்த அறிவுரைகளையும் வழங்குகிறது.
மிகவும் பயனுள்ள இப்புத்தகத்தைப் படித்து பயன்பெற அன்புடன் அழைக்கிறது,
அஞ்சுமன் அறிவகம்
Comments
Comments are closed.