ஜெயலலிதா அம்மு முதல் அம்மா வரை
நூல்கள் அறிவோம்
நூல் பெயர் : ஜெயலலிதா அம்மு முதல் அம்மா வரை
ஆசிரியர்: ஜெ. ராம்கி
பதிப்பகம் : கிழக்கு பதிப்பகம்
நூல் பிரிவு : GA
*இவ்வருட புதிய வரவுகள்*
எப்படி எம்.ஜி.ஆரை நீக்கிவிட்டுத் தமிழக அரசியல் சரித்திரம் பேசமுடியாதோ, அப்படித்தான் ஜெயலலிதாவை விலக்கிவிட்டும் முடியாது. ஒரு நடிகையாகத் தமிழக மக்களுக்கு அறிமுகமாகி, எம்.ஜி.ஆருக்குப் பின் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் மாபெரும் கட்சியை அதன் சிதைவிலிருந்து மீட்டுக் காப்பாற்றிக் கரையேற்றியவர்.
ஏராளமான ஊழல் வழக்குகள், கோர்ட் படியேறல்கள், தேர்தல் தோல்விகள், அடியோடு வீழ்ச்சி என்று காலம் அவரை எத்தனை அசைத்துப் பார்த்தாலும் அசையாத இரும்புப் பெண்மணி. அவரது உடன்பிறவா சகோதரி பற்றி, அவர்மூலம் வந்து சேர்ந்த உறவுகள் பற்றி, உலகம் வியந்த அவரது வளர்ப்பு மகன் திருமணம் பற்றி, அவரது வீட்டில் கைப்பற்றப்பட்ட நகைகள், புடைவைகள், செருப்புகள் பற்றிக்கூட கோடி கதைகள் சொல்லவும் கேட்கவும் எப்போதும் ஆள்களுண்டு தமிழகத்தில்.
ஒரு வெற்றிகரமான நடிகையாகத் தமிழ்த் திரைவானில் கோலோச்சிய நாள் முதல் அரசியலுக்கு வந்து, தமிழக முதல்வராக இருந்து, பதவி இழந்து, ஊழல் வழக்குகளில் சிக்கி, இன்று எதிர்க்கட்சித் தலைவராகச் செயல்படுவது வரையிலான ஜெயலலிதாவின் வாழ்க்கைக் கதையை சுவாரசியமாகச் சொல்கிறது இந்தப் புத்தகம். நூலாசிரியர் ஜெ. ராம்கி முன்னதாக கலைஞர் மு. கருணாநிதியின் வாழ்க்கை வரலாறை (மு.க) எழுதியவர்.
*அஞ்சுமன் அறிவகம்*
Comments
Comments are closed.