சோலை எனும் வாழிடம்
நூல் பெயர் : சோலை எனும் வாழிடம்
ஆசிரியர் : சு.தியடோர் பாஸ்கரன்
வெளியீடு : உயிர்மை பதிப்பகம்
நூல் பிரிவு : GW–3187
நூல் அறிமுகம் :
தமிழில் சூழியல் சார்ந்த அசலான கருத்துருவாக்கங்களை தொடர்ந்து முன்வைப்பவை சு.தியடோர் பாஸ்கரனின் எழுத்துக்கள். நாம் வாழும் பூமியின் அற்புதங்களையும் அவற்றின் மேல் செலுத்தப்படும் வன்முறையையும் அவர் இந்த நூலிலும் வெகுநுட்பமாகக் கவனப்படுத்துகிறார். வாழிடம், காட்டுயிர் சார்ந்தும் சுற்றுச்சூழல் சார்ந்தகோட்பாட்டுப் பிரச்சினைகளை முன்வைத்தும் இந்த நூல் மிக அழகான விவாதங்களை உருவாக்குகிறது. நேரடி அனுபவங்களிலிருந்தும் ஆழமான வாசிப்பிலிருந்தும் எழுதப்பட்ட இக்கட்டுரைகள் சூழியல் சார்ந்த எழுத்து முறைமைக்கு மற்றொரு சிறந்த பங்களிப்பு.
காட்டுயிர் பற்றிய புதிய சட்டங்களும் திட்டங்களும் வந்தவண்ண மிருந்தாலும் காட்டின் பரப்பு குறைந்து, சுற்றுச்சூழல் மாசுபட்டு உயிரினங்களின் வாழிடம் சுருங்கிவிட்டது. இதன் விளைவாக மனிதர் காட்டுயிர் எதிர்கொள்ளல் நாடெங்கிலும் அதிகரித்து வருகின்றது. இதனால் :பல இடங்களில் மக்கள் காட்டுயிர் பேணலுக்கே எதிர்ப்பு தெரிவிக்கின்றார்கள். சத்தியமங்கலம் காட்டை வேங்கை சரணாலயமாக அறிவித்தபோது சில கிராமங்களில் எதிர்ப்பு எழுந்தது. அரசு காட்டுயிர் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிப்பதில்லை. இந்த பின் புலத்தின் சில நல்ல காரியங்கள் நடப்பதையும் நாம் பதிவு செய்தாக வேண்டும். தமிழகத்தில் பல புதிய அமைப்புகள் இந்தத் துறையில் இயங்க ஆரம்பித்திருக்கின்றன. நாளிதழ்களில் தரமான உயிரியல் கட்டுரைகளை வாசிக்க முடிகின்றது.
இத்தகைய நூல்களை படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.
அஞ்சுமன் அறிவகம்
Comments
Comments are closed.