சேரமான் பெருமான் (நாவல்)
நூல்கள் அறிவோம்
நூல் பெயர் : சேரமான் பெருமான் (நாவல்)
ஆசிரியர் : ஏ.எம்.யூசுப்
வெளியீடு : புதுயுகம்
நூல் பிரிவு : GN-773
நூல் அறிமுகம்
தமிழ் சமூகம் பாண்டிய மன்னர்களையும் சோழ மன்னர்களையும் நிறையவே தெரிந்து வைத்திருக்கிறது. ஆனால் சேர மன்னர்களை பற்றிய குறிப்புகள் வரலாற்று ஆவணங்களிலும் பாட புத்தகங்களிலும் மிக சொற்பமாகவே காணக் கிடைக்கறது.
சேர மன்னர்களில் முதலாம் சேரமான் பெருமாள், இரண்டாம் சேரமான் பெருமாள், மூன்றாம் சேரமான் பெருமாள் ஆகியோரின் ஆட்சி குறிப்பிடத்தக்கது.
இந்த மூன்று மன்னர்களில் முதல் இரண்டு மன்னர்கள் சைவ சித்தாந்தத்தை பரப்பியவர்கள். மூன்றாம் சேரமான் பெருமாள் பாஸ்கர ரவி வர்மன் காலத்தில், மதீனா மாநகரில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உயிரோடிருந்த கடைசி கால கட்டம். இவரது காலத்தில் கேரளத்திற்கு வணிகம் செய்ய வந்த இஸ்லாமியவர்களால் இம்மண்ணில் இஸ்லாம் அறிமுகம் செய்யப்பட்டது. அக்காலத்தில் சேர நாட்டை மட்டுமல்லாமல் மன்னர் சேரமான் பெருமாளையும் இஸ்லாம் அதன் தூய நெறிமுறைகளால் தன்வசம் ஈர்த்தது.
இவ்வாறு ஈர்க்கப்பட்ட சேரமான் பெருமாள் அண்ணலாரைப் பற்றி அரபிய வணிகர்களிடம் விசாரித்து அறிந்து கொள்வதும், வர்த்தகம் செய்யப்பட்ட அரபியர்களின் வாழ்க்கை முறையும், இஸ்லாம் இந்தியாவின் தெற்கே பரவிய முறைகளும் புதினமாக இந்நூல் எடுத்துரைக்கிறது.
இந்தியாவில் எந்த மொழியிலும் இதுவரை எழுதப்பட்டிராத ஒப்பற்றதொரு காவியம். பெண்களும், சிறுவர்களும் கூடப் படிக்கத் தக்க எளிய தமிழ் நடை. ஒவ்வொரு குடும்பத்திலும் இருக்க வேண்டிய இலக்கியப் பொக்கிஷம்.
இந்நூலைப் படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.
அஞ்சுமன் அறிவகம்
Comments
Comments are closed.