சுப்புடு தர்பார் பகுதி-1
அஞ்சுமன் அறிவகம்
நூல்கள் அறிவோம்
நூல் பெயர் : சுப்புடு தர்பார் பகுதி-1
ஆசிரியர்: சுப்புடு
பதிப்பகம்: கண்மணி வெளியீடு
நூல் பிரிவு: GGA- 3939
நூலைப் பற்றி-
எந்த விமரிசனத்திலும், அதில் நியாயம் இருக்கிறதோ இல்லையோ காட்டம் இருந்தால், அந்த விமரிசனம், “இதோ இங்கே இருக்கு பொழுதுபோக்கு” என்று நம்மை அழைக்கிறது. நம் தெருக்களில் இரண்டு பேர் சண்டை போட்டுக் கொண்டால்கூட கூட்டம் கூடி அங்கே ட்ராஃபிக் ஜாம் ஆகிவிடுகிறது – அப்புறம் அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டு போய் விடுகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள், ஆனால் நம் எல்லோரையும் வம்புச் சண்டைகள் வசீகரிக்கின்றன. விஷயம் இல்லாமல் இதைச் செய்கிறவன் சீக்கிரமே கோமாளியாகி விடுகிறான், ஆனால் விஷயம் தெரிந்தவனுக்கு பரவலான மக்களைச் சென்று சேர நகைச்சுவையும் கற்பனையும் காட்டமான குரலும் கருவிகள். சுப்புடுவுக்கு விஷயம் தெரியுமா என்ன, எந்த அளவுக்குத் தெரியும் என்ற விஷயம் எனக்குத் தெரியாது, ஆனால் அவரிடம் காட்டம், கற்பனை, நகைச்சுவை என்ற இந்த மூன்றும் முழுமையாக இருந்தன என்பது அவரது “சுப்புடு தர்பார் – பகுதி -1” வாசிக்கும்போது தெளிவாகத் தெரிகிறது.
அஞ்சுமன் அறிவகம்
Comments
Comments are closed.