சிறு தானிய உணவு வகைகள்
நூல் பெயர் : சிறு தானிய உணவு வகைகள்
ஆசிரியர் : இனியவன்
வெளியீடு : கவிதா பப்ளீகேஷன்
நூல் பிரிவு : GRC-341
நூல் அறிமுகம்
சென்ற தலைமுறையில் உடல் உழைப்பு அதிகம்; இயந்திரப் பயன்பாடு குறைவு. இன்றைய தலைமுறையில் அது தலைகீழாக மாறிவிட்டது. நார்ச்சத்து உணவிற்குச் சீனர்களும் ஜப்பானியர்களும் அதிக முக்கியத்துவம் தருகின்றனர். ஆனால் இந்தியாவில் மாவுச் சத்து மோகம்தான் எல்லோரையும் ஆட்டிப் படைக்கிறது. தவிர, அதிக கலோரிகள் கொண்ட உணவையே விரும்பி உண்கிறோம். இந்தக் காரணம்தான் இங்கே சர்க்கரை நோயாளிகளை அதிகரித்து விட்டது.
இப்போது சிறிது விழிப்புணர்வு வந்திருந்தாலும், பெரும் பாலானவர்களுக்குச் சிறுதானியங்களின் மகத்துவம் தெரியவில்லை.
எடையைக் கவனியுங்கள். தோற்ற்றத்தை உற்றுப் பாருங்கள். அரிசி உணவைத் தவிர்த்துவிட்டுச் சிறுதானியத்திற்கு மாறுங்கள். உங்கள் உணவுத் தட்டில் ஒருவேளையாவது சிறுதானிய உணவு இருக்கட்டும். விழித்துக் கொள்ளுங்கள். இந்நூலில் சிறு தானியங்கள் கொண்டு தயாரிக்கப்படும் உணவு வகைகளின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. செய்து பயன்படுத்திப் பலன் பெறுங்கள்.
இத்தகைய நூல்களை படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.
அஞ்சுமன் அறிவகம்
Comments
Comments are closed.