சாட்சி மொழி
நூல்கள் அறிவோம்
நூல் பெயர்:சாட்சி மொழி
ஆசிரியர் :ஜெயமோகன்
வெளியீடு : உயிர்மை பதிப்பகம்
நூல் பிரிவு : GP-2573
நூல் அறிமுகம்
நாம் எப்போதும் அரசியலை கூர்ந்து கவனித்துக் கொண்டுயிருக்கிறோம்,ஓயாமல் விவாதிக்கிறோம்.ஏனென்றால் அது நம்முடையே நிகழ்காலத்தின்,எதிர்காலத்தின் மீதான விவாதம்.இந்த விவாதங்களில் எத்தனையோ தரப்புகள் உண்டு .கட்சித் தரப்புகள் ,கோட்பாட்டின் தரப்புகள் …அவற்றில் ஒன்று எழுத்தானின் தரப்பு.
எழுத்தானின் தரப்பு என்பது கட்சி மற்றும் கோட்பாடுகளை சார்ந்ததாக இருக்க முடியாது.எந்த நுண்ணறிவால் அவன் இலக்கியங்களை படைக்கிறானோ அந்த நுண்ணுருவால் அவன் சமகால அரசியலை அணுகும் போது உருவாகும் கருத்துக்களால் ஆனது அது.
ஒரு நாவலை எழுதும் அதே ஆராய்ச்சியுடன் முழுமை நோக்குடன் அவன் வரலாற்றையும் அரசியலையும் பார்ப்பான் என்றால் அவன் குரலை எவரும் புறக்கணித்து விட முடியாது.
சமகால அரசியல் குறித்த எண்ணங்களும் எதிர்வினைகளும் பதிவுகளும் கொண்ட நூல் இது.
இந்நூலைப் படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.
அஞ்சுமன் அறிவகம்
Comments
Comments are closed.