கூகிள் பயன்படுத்துவது எப்படி?
நூல் பெயர் : கூகிள் பயன்படுத்துவது எப்படி?
ஆசிரியர் : என்.சொக்கன்
வெளியீடு : கிழக்கு பதிப்பகம்
நூல் பிரிவு : GC-2186
நூல் அறிமுகம்
கூகிள் இல்லாத ஓர் உலகம் எப்படி இருக்கும்? இதனைத் தெரிந்து கொள்ளவும்கூட நமக்கு கூகிள் தேவைப்படுகிறது என்பதுதான் உண்மை.
பக்கத்தில் நல்ல ஹோட்டல் எங்கிருக்கிறது என்னும் எளிமையான தேடலில் தொடங்கி தீவிரமான ஆய்வுகள் உள்பட அனைத்துக்கும் கூகிளையே இன்று நாம் நம்பியிருக்கிறோம்.
உண்மையில், நாம் கேட்கும் எந்தக் கேள்விக்கும் கூகிளிடம் பதில் இல்லை. ஆனால் அந்தப் பதில் எங்கே இருக்கிறது என்று கூகிளுக்குத் தெரியும். அங்கிருந்து அதைக் கச்சிதமாகக் கொத்திக் கொண்டுவந்துவிடும்.
ஆனால் இதிலொரு சவால் இருக்கிறது. மேல்பார்வைக்குச் சாதாரணமாகத் தோற்றமளிக்கும் கூகிள் உண்மையில் ஒரு மிகப் பெரிய இயந்திரம். அதனை முழுக்கப் புரிந்துகொண்டால்தான் நம் தேடல் சுலபமடையும். கேட்ட விஷயம் துல்லியமாகக் கை மேல் கிடைக்கும்.
இந்தப் புத்தகம் சில அத்தியாவசியமான அடிப்படைகளை அறிமுகப்படுத்துகிறது.
*நமக்குத் தேவைப்படும் விஷயத்தை எப்படி கூகிளில் தேடியெடுப்பது?
*கூகிள் அளிக்கும் மலைக்க வைக்கும் மில்லியன் விடைகளில் நமக்குத் தேவையானதை எப்படிச் சுலபமாகக் கண்டறிவது?
*தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழிகளை கூகிளில் பயன்படுத்துவது எப்படி?
*மொபைலில் எப்படி விஷயங்களைத் தேடி பெறுவது?
*கூகிள் என்பது தேடும் இயந்திரம் மட்டும்தானா? அல்லது வேறு உபயோகங்களும் உள்ளனவா?
ஒவ்வோர் அத்தியாயத்திலும் சில சிறு பயிற்சிகள் உள்ளன. படிக்கும்போதே கையோடு முயன்று பார்த்தால் நிபுணத்துவம் பெற்றுவிடலாம்.
மொத்தத்தில் கூகிள் நமக்கு உதவக் காத்திருக்கிறது.
இத்தகைய நூல்களை படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.
அஞ்சுமன் அறிவகம்
Comments
Comments are closed.