உலக அதிசயங்கள்
நூல் பெயர் : உலக அதிசயங்கள்
ஆசிரியர் : தா.ஸ்ரீனிவாசன் எம்.ஏ.,எம்.,எட்.,எம்.பில்.
வெளியீடு : மெர்குரிசன் பப்ளீகேஷன்ஸ்
நூல் பிரிவு : GW–564
நூல் அறிமுகம் :
நாகரிகத்தின் தொடக்க காலத்தில் இருந்தே களைத்த மனிதன் ஓய்வு நேரத்தில் மன அமைதிக்காகவும், மகிழ்ச்சிக்காகவும், கூடி வாழ்வதற்காகவும்க், வளர்ச்சிக்காகவும் கலைகளையும் இலக்கியங்களையும் படைக்க தொடங்கினான். கடின உழைப்பாலும் அதனால் வரும் சக்தியாலும் சோதனைகளை வென்று சாதனைகளைப் படைத்தான். அந்த சாதனைகளின் வெளிப்பாடே நாம் இன்று காணும் வியப்பூட்டும் உலக அதிசயங்கள்.
மனிதனின் கடும் உழைப்பும். கலைத்திறனும் சேர்ந்து அமைந்த பல வரலாற்றுச் சின்னங்கள் பல நூற்றாண்டுகளைக் கடந்தும் நமக்கு தொடர்ந்து வியப்பைத் தந்து கொண்டிருக்கின்றன. பூமியின் மேல்பரப்பில் வியப்பைத் தரும் அதிசயங்கள் இருப்பது போல் நீருக்கடியிலும் பல வியப்பிற்குரிய அதிசயங்கள் உள்ளன. அதுமட்டுமல்லாமல் மனிதன் தன் தொழில் நுட்ப அறிவாலும், திறத்தாலும் கட்டிய, கட்டி வரும் கட்டுமானங்கள் இன்று அதிக வியப்பைத் தருகின்றன.
ஒன்றைப் பார்த்து அல்லது கேட்டு வியந்தால் அதுவும் அதிசயம்தான். அந்த வகையில் காலவேறுப்பாட்டின்படி பண்டைய ஏழு அதிசயங்கள், இடைக்கால ஏழு அதிசயங்கள் என பாட்டியலிட்டுப் பார்க்கலாம். உலக அதிசயங்கள் என்னும் இந்த நூலில் 1. தாஜ்மஹால் 2. சீனப் பெருஞ்சுவர் 3. கொலோசியம் 4. மீட்பர் கிறிஸ்து சிலை 5. சிக்சென் இட்சா 6. மச்சு பிக்ச்சு 7. பெட்ரா என்னும் ஏழு உலக அதிசயங்களை பட்டியலிட்டு நூலாக்கி வழங்கிருக்கிறார்கள்.
இத்தகைய நூல்களை படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.
அஞ்சுமன் அறிவகம்
Comments
Comments are closed.